"இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன்
துன்பம் வருகினும் துவண்டு விடான்!
வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன்
சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே
கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!"
"எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்குபவன்
திண்ணம் கொண்ட கொள்கை உடையவன்
மண்ணில் விழுந்தாலும் எழுந்து நிற்பானே!
விண்ணை முட்டும் மகிழ்வு வருகினும்
கண்ணைத் திறந்து உண்மை அலசுவானே!"
"மண்ணும் மனிதரும்"
"மண்ணை உழுது நாகரிகம் படைத்தான்
கண்ணாய்ப் போற்றி வளம் பெருக்கினான்
பெண்ணையும் மண்ணையும் ஒன்றாய்ப் பார்த்தான்
எண்ணம் முழுவதிலும் மதிப்பு வழங்கினான்
வண்ண வடிவில் இரண்டையும் இரசித்தான்
மண்ணும் மனிதரும் தெய்வீக இணைப்போ?"
"விண்ணில் இருந்து மழை பொழிய
தண்ணீரில் நனைந்து மரம் துளிர்க்க
உண்ண உணவு எங்கும் இருக்க
கண்ணீர் மறைந்து மகிழ்வு மலர
பெண்ணுடன் சேர்ந்து ஆடி மகிழ
மண்ணும் மனிதரும் சொர்க்க இணைப்போ?"
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
0 comments:
Post a Comment