"பூவுக்குள் பொங்காது பூகம்பம்"
"பூவுக்குள் பொங்காது பூகம்பம்
பூரியரென்று
யார் சொன்னது?
பூவையர்
என்றால் கேவலமா
பூத்துக்குலுங்குவது
அழகு மட்டுமா?"
"மண்ணில்
வளத்தைக் காண்பவனே
பெண்ணில்
வளமோ ஏராளம்!
ஆண்களின்
இன்பப் பொருளல்ல
கண்கள்
அவர்களே வாழ்வில்!"
"சிவன்-
பார்வதி கதை தெரியாதோ
சித்தத்துடன்
சமஉரிமை வழங்காயோ?
சினம்கொண்டு
அவள் எழுந்தால்
சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?"
“யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
"உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில்
வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்
மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?
மனிதம் மறந்த ஒருவன் மனிதனா??"
"வெறும் சதையும் எலும்பும்தானா மனிதன்
வெறும் பலமும் செல்வமும்தானா மனிதன்
வெறும் புகழும் பதவியும்தானா மனிதன்
யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
"கண்கள் விழித்து கருணை காட்டும்
கொடுமையைக் கண்டு மனது குமுறும்
அறிவுடன் அறிந்து உதவும் கரமும்
எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"
"துயரம் கண்டு அக்கறை காட்டி
ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து
தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்
அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment