கல்வியே வளர்ச்சி & வலைத் தளங்களில் சிறுவர்களே

 


கல்வியே  வளர்ச்சி

 

கதிரவன் ஒளிக்கின்ற கல்வியினால்,

காடுகளும் நகரமாய் மாறிடும்.

அறிவொளி வீசும் ஒளிக்கிழவி,

அருவியாய் அறிவை பரப்பிடும்!

 

நூலினை நேசிக்கும் நாட்டினிலே,

நலம் பெரும் மக்கள் வளர்வார்களே.

கல்வியெனும் கனலாலே,

காலமெல்லாம் விளையாடலாம்!

 

வெள்ளி வீடுகள் எழும்பிடலாம்,

கோவில் கோபுரமாய் உயரலாம்

அறிவுதான் நாட்டை எழுப்பிடுமே,

அழிவில்லா வளத்தை கொடுத்திடுமே!

 

மண்ணை விட புத்தி வலிமை பெரிது,

மக்கள் கற்றால் உலகம் கடிது!

கல்வியன்றி வளர்ச்சி இல்லை,

காற்றென அது நாட்டை உயர்த்துமே!

:மனுவேந்தன் செ


"வலைத் தளங்களில் சிறுவர்களே!"

 

"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே

கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்!

இலைமறை காய்போல் அது உங்களை

விலையும் பேசும் மோசமும் செய்யுமே!"

 

"மலையாக உடல் அசையா குழந்தைகளே!

மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக

காலை படிப்பிலும் கவனம் சிதற

நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!"

 

: [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

0 comments:

Post a Comment