தலைச்சுற்றல் - உடல்நலம்

 [Dizziness]


தலைச்சுற்றல் என்பது  உடல் சமநிலை பாதிக்கப்படுவதும் போன்ற உணர்வாக இருக்கும். இது பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது:

1.   மயக்கம் (Lightheadedness)மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காதபோது ஏற்படும்.

2.   சுற்றல் உணர்வு (Vertigo)சுற்றம் சுற்றுவது போல உணர்வது, இது காது மற்றும் சமநிலை பிரச்சினைகள் காரணமாக ஏற்படலாம்.


📌 தலைச்சுற்றலுக்கான முக்கிய காரணங்கள்

இரத்த அழுத்தக் குறைவு வின் போதுதிடீரென எழுந்தால்  அல்லது நீண்ட நேரம் நின்றால் ஏற்படலாம்.
நீர்ச் சத்து குறைவு (Dehydration)தண்ணீர் குறைவாக குடித்தால் இரத்த ஓட்டம் குறைந்து தலைச்சுற்றலாம்.
இரத்த சோகை (Anemia)இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்லாது.
சர்க்கரை அளவு குறைவு (Hypoglycemia)பட்டினியாக நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருந்தால், மூளைக்கு போதுமான எரிசக்தி கிடைக்காது.
காது தொடர்பான பிரச்சினைகள்உள்ளக காது (Inner Ear) சமநிலை பிரச்சினைகள்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் (Stress & Anxiety)மனதளவில் பாதிக்கப்பட்டால் கூட தலைச்சுற்றலாம்.
மருந்துகளின் பக்க விளைவுசில மருந்துகள் தலைச்சுற்றலுக்கு காரணமாக இருக்கலாம்.
கனமான நோய்கள்மெனியர்ஸ் நோய் (Ménière’s Disease), நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். [மெனியர் நோய் என்பது, உள் காதுவில் ஏற்படும் ஒரு நோய். இதை இடியோபாடிக் எண்டோலிம்பேடிக் ஹைட்ரோப்ஸ் என்றும் அழைப்பார்கள். இந்த நோய், தலைச்சுற்றலுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.]

உள் காது (Inner Ear) என்பது வெஸ்டிபுலர் அமைப்பு (Vestibular System) என்று அழைக்கப்படுகிறது. இது சமநிலையை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி.

📌 உள் காதில் உள்ள திரவத்தின் (Endolymph) வேலை:

  • தலையை எந்த திசையில் நகர்த்தினாலும், இந்தத் திரவம் அதற்கு ஏற்ப நகரும்.
  • இந்த நகர்வு மூலம் நரம்புகள் மூளைக்கு தகவல் அனுப்பும்.
  • மூளையும் கண்களும் இதை வைத்து உடலின் சமநிலையை சரிசெய்யும்.

🔴 ஆனால், இந்தத் திரவம் வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாக அல்லது தவறாக நகர்ந்தால், மூளைக்கு தவறான தகவல் செல்கிறது. இதனாலும்  தலைச்சுற்றல் ஏற்படுகிறது!


🏠 தலைச்சுற்றலுக்கு வீட்டு வைத்தியங்கள்

தண்ணீர் போதுமான அளவில் குடிக்கவும்உடல் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைச்சுற்றலாம்.
சத்துள்ள உணவு உண்கஇரும்புச்சத்து (Iron) மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் உட்கொள்ளவும்.
மெல்லமாக நகரவும்திடீர் அசைவுகள் (அமர்ந்திருந்து திடீரென்று எழுதல்) தவிர்க்கவும்.

காஃபின், ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தலைச்சுற்றும் போது அமர்ந்துகொள்ளவும்நிலை தடுமாறும் முன்னே அமர்ந்துகொள்வது பாதுகாப்பானது.
சோர்வு ஏற்படாமல் உறக்கம் போதுமான அளவில் பெறுக.
தலை சுற்றும் போது கண்களை மூடி ஓய்வெடுக்கவும். ஆழ்ந்த சுவாசம், யோகா மற்றும் தியானம் போன்ற தளர்வு பயிற்சிகள் அதிக மன அழுத்தத்தைத் தடுக்க உதவும்.


🚨 எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

🔴 திடீர் தீவிர தலைச்சுற்றல்
🔴
காது ஒலிப்பு அல்லது காதுகேட்பதில் குறைவு
🔴
கையில் அல்லது காலில் திடீர் பலவீனம்
🔴
தொண்டை தடுமாறுதல், பேசுவதில் தடுமாறு இருந்தால்.
🔴
தலைவலி, வாந்தி,. கண் இருள்தல்

இது சாதாரணமான தலைச்சுற்றலா அல்லது தீவிரமான பிரச்சினையா என்பதை மருத்துவ ஆலோசனை மூலம் உறுதி செய்யலாம்.

📌காதினுள் குடுமி ஒரு காரணமா? குடுமியை எவ்வாறு அகற்றுவது?

உள்ளங்கையில் சற்று நீரை எடுத்து அதைக் காதிற்குள் விடவேண்டும். பின்னர் தலையைச் சரிக்க உள்ளே விட்ட நீரானது குடுமியைக் கரைத்துக் கொண்டு வெளியே வந்தவிடும். இவ்வாறு சில தினங்களுக்கு குளிக்கும்போது செய்து வர காதுக் குடுமி அகன்றுவிடும்.

குடுமி சற்று இறுக்கமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லண்ணெயில் சில துளிகளை ஒரு சில தினங்களுக்கு குறிப்பட்ட காதில் விட்டுவர அவை இளகி வெளியேறும். பேபி ஓயில், கிளிசரீன் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவது உண்டு.

அதைவிடுத்து காதினுள் குச்சி,ஊசி போன்ற கடினமான பொருட்களை செலுத்தி ஆபத்தினை தேடிவிடாதீர்கள். சரிவராவிடில் மருத்துவரை அணுகுவதே சிறந்ததுகுடுமியை உடனே நீக்கும் வழிகளை அவர்களிடமிருந்து பெறலாம்.

தொகுப்பு:தீபம் இணையத்தளம் / உடல்நலம் / www.ttamil.com


0 comments:

Post a Comment