"தாய்மொழி" & "நம்பிக்கைத் துரோகம்"

                                       

"தாய்மொழி"

[அந்தாதிக் கவிதை]

 

"தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம்

அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே!

மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம்

பேசும் மொழியைக்  கலக்காமல் கதைப்போம்!

கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!"

 

"நிலைத்த புகழை அது பரப்பட்டும்

பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே!

சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும்

முழுமையான முறைப் படி வளரட்டும்! 

வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

"நம்பிக்கைத் துரோகம்"

 

நம்பிக்கையின் தாழ்வான அடுக்குகளில்

என் வாழ்வு வீழ்த்திய சுவடுகள்,

நான் உன்னில் நம்பிய ஒளியின் துளிகள்,

இன்று இருளின் நிழலில் மறைந்துவிட்டன.

 

உன் வார்த்தைகளில் உறுதியைக் கண்டேன்,

ஆனால் அதை வெறும் பொய்யென உணர்ந்தேன்.

நெஞ்சில் நீ புனைந்த மாயச் சித்திரங்கள்,

முடிந்த போதெல்லாம் சிதறித் தூரமானது.

 

நம்பிக்கையின் செடி வேரறுந்தியது,

உன் செயல்களின் புயலால் தோல்வியடைந்தது.

என் கண்ணீர் மண்ணில் விழ,

அது காயாமல் காயமாய் மீதமுள்ளது.

 

உன் சிரிப்பின் பின்னே மறைந்த பொய்,

என் உயிரை முடிந்தும் காய்ச்சியது.

துரோகத்தின் தீண்டல் என் நெஞ்சில்,

தீயாய் நீடிக்கிறது தூரத்திலும்.

 

இப்போது...

நம்பிக்கையை மறந்தேன்,

துரோகத்தின் பாடம் கற்றேன்.

அன்பின் விழிகள் மூடிக்கொண்டு,

மௌனத்தின் வழியில் நடைபோடுகிறேன். 

-:செ.மனுவேந்தன்:-



0 comments:

Post a Comment