"காசேதான் கடவுளடா"
"காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா
காதல் வேண்டுமா பரிசு கொடடா
காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா!
காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால்
காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!"
"ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு
ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா!
ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும்
ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா
ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!"
தர்மம் தலை காக்கும்
"தர்மம் வகுத்த வழியில் நின்று
கர்வம் மறந்து ஆசை துறந்து
ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி
அர்த்தம் உள்ள உதவி செய்யின்
ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!"
"தாய் தந்தை இருவரையும் மதித்து
வாய்மை என்னும் பண்பு கொண்டு
ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல்
மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால்
செய்த நன்மை தலை காக்கும்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment