...எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்?
எல்லா நேரமும் உணவு சாப்பிடுவது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. நம் உடலுக்கு தேவையான அளவு, சரியான நேரத்தில், சீரான உணவை சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகும்.காலை உணவை எந்த நேரத்தில் எடுக்கலாம்?
காலை உணவை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் எடுப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
இதற்குக் காரணம்:
1.உடலின் மெட்டாபாலிசத்தை தூண்டும்:
காலை உணவால் உடல் நாள்தோறும் பொருத்தமாக இயங்கத் தயாராகிறது.
[[வளர்சிதை மாற்றம் (Metabolism) அல்லது அனுசேபம் என்பது, உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகின்றன.]]
2.ஆற்றல் தரும்:
நாள் முழுவதும் செயல்பட தேவையான ஆற்றலை முதல் உணவிலேயே பெற முடியும்.
3.சீரான உடல் எடை:
காலை உணவை தவிர்க்காததால் உணவு மேல் கட்டுப்பாடு ஏற்படும், அதே சமயம் பிற உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருக்க உதவும்.
சிறந்த காலையுணவு:
*காலையில் ஆவியில் வேகவைத்த உணவு - இட்லி, ஆப்பம் போன்றவை, எண்ணெய் குறைவாக ஊற்றி தோசை, புட்டு, இடியாப்பம் தேங்காய்ப்பால் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளலாம். இட்லி சாம்பார் எப்பவும் பெஸ்ட்.
*காலை உணவுடன் சுண்டல் வகைகளை சேர்த்துக்கொண்டால் அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
*வேக வைத்த நிலக்கடலை, முளை கட்டிய பச்சை பயிறு போன்றவை காலை வேளைக்கு உகந்த உணவுகள்.
*புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது நல்லது.
நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து குறைவான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்
“அவர்கள் நட்ஸ், முட்டைகள், சுண்டல், போன்ற மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
காலை உணவாக நாம் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, சோலே பட்டூரே போன்றவை, அதிக மசாலா
உடைய உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். காலை உணவில் அசைவம் குறைவாக எடுக்க வேண்டும்”
உணவுக்காக உடலல்ல , உடலுக்காக உணவினை தெரிவுசெய்து ஆரோக்கியமாக வாழ்வோம். மதிய உணவுப்பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
தொகுப்பு: தீபம் இணையம்
0 comments:
Post a Comment