"காசேதான் கடவுளடா" & தர்மம் தலை காக்கும்


"காசேதான் கடவுளடா"

 

"காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா

காதல் வேண்டுமா பரிசு கொடடா

காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா!

காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால்

காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!"

 

"ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு

ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா!

ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும்

ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா

ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!"


தர்மம் தலை காக்கும்

 

"தர்மம் வகுத்த வழியில் நின்று

கர்வம் மறந்து ஆசை துறந்து

ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி

அர்த்தம் உள்ள உதவி செய்யின்

ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!"

 

"தாய் தந்தை இருவரையும் மதித்து

வாய்மை என்னும் பண்பு கொண்டு

ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல்

மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால்

செய்த நன்மை  தலை காக்கும்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

எல்லாம் பொம்மை & மூடநம்பிக்கை - குறும்படம்

                                        🎞 🎞எல்லாம் பொம்மை🎞 



பிள்ளையாரோடு பேசும் அம்மாவுக்கு பிள்ளையுடன் பேச நேரமில்லை. அறம் தேடும் மனிதரெல்லாம் இல்லறம் மறந்து வாழ்வதேன்?

🎞



அனைத்தையும் கடந்தவனை அற்ப செயல்களால் திருப்தியாக்கி வேண்டுவன பெறலாம் என்ற பொய்யான பிரச்சாரம் கொண்டு மக்களை மாக்களாக்கிப்  பிழைக்கும் ஏமாற்றுக் கூட்டம் 

📽பகிர்வு:தீபம் இணையம்

10 சிரிப்புகள்


தொல்காப்பியம்.... /02/- அமைப்பு

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது

இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது.

மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.

எழுத்ததிகாரம்.

1.நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்)

2.மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்)

3.பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்)

4.புணரியல் – (புணரியல் செய்திகள்)

5.தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்)

6.உருபியல் (உருபியல் செய்திகள்)

7.உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)

8.புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)

9.குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)

எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்

எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.

இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன.

மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.

ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.

ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.

தொடரும்.....

தொகுப்பு:செ.மனுவேந்தன்