தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது.
இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது.
மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.
எழுத்ததிகாரம்.
1.நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்)
2.மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்)
3.பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்)
4.புணரியல் – (புணரியல் செய்திகள்)
5.தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்)
6.உருபியல் (உருபியல் செய்திகள்)
7.உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
8.புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)
9.குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)
எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.
இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன.
மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.
ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.
ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.
ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of
words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.
தொடரும்.....
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment