வாழ்வின் அர்த்தம் எங்கே?

 

வாழ்வின் அர்த்தம் எங்கே? 

ஓய்வில்லாத உழைப்பில்

ஓய்வு எங்கு இருக்கிறது?

வாழ்வின் சுகம் தப்பி,

உறவுகளை தொலைத்து,

பணம் மட்டும் மிஞ்சுகிறது.

 

பாடுபட்டு தேடி சம்பாதித்து

புதையல் போல் புதைத்துவைத்து,

நாளை வாழ்வோம் என்றோரும்

இன்று சிரித்து வாழ  மறக்கிறார்.

 

இன்றே வாழ்ந்திடு,இல்லையேல்

நாளை என்ற சொல் மாயை.

மூச்சுக்கு நேரம் அளிக்காத உலகில்,

சிரிக்க நேரம் கிடையாதே என்றும்

 

விடை கேட்கும் நொடியில்,வாழ்வு

வினாக்களாகி நிற்கின்றது,பதில்

தேடும் பயணமே வாழ்க்கை,அப்

பயணத்தின் சுவாரசியமே அதன் அர்த்தம்.

கடலின் அலைகளில் விளையாடும்

சின்ன மணல் துகளாய்,வாழ்வின்

அர்த்தமும் எங்கோ புதைந்திருக்கிறது.

-செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment