முடிவுரை
* பாரதியார் பாடல்கள்
*ஒளவையார் நூல்கள் / [முதலான சங்ககால புலவர்கள் படைப்புகள்]
எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை
கொன்றை வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, ஞானக்குறள், அசதிக்கோவை
அறநூல்கள்
தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன அறநூல்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன.
1.திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6. திரிகடுகம்
7. ஆசாரக் கோவை
8. பழமொழி
9. சிறுபஞ்சமூலம்
11. முதுமொழிக்காஞ்சி
11.ஏலாதி
எனப்படும் அறிவுரை நூல்கள் நாம் கற்று ஒழுகுவதற்கு எம்முன் குவிந்து கிடக்கின்றன.
நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றோம். உயர்ந்த இலட்சியமுறை மனிதர்களை உருவாக்குவதன் மூலமாகத்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; மனிதர்களை உருவாக்குவதற்குப் பெருமளவு தமிழ் இலக்கிங்களில் உள்ள வாழ்வியல் சிந்தனைகள் உதவும். பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஊட்டி மனிதம் காக்கப் பயன்படுகிறது இலக்கியங்கள்.
தமிழ் இலக்கியங்களில் குவிந்துகிடக்கின்ற மனித வாழ்வியல் கருத்துகளான, அறம், தனிமனித ஒழுக்கம், இல்லறம், பிறனில் விழைதல், விருந்தோம்பல், ஈகை, கல்வி, மது பற்றிய விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அறிவியல் நம் வாழ்க்கை பயணங்களில் கையாண்டால் நமது வாழ்வு ஒளிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இக்கட்டுரையானது தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகளை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நம் இலக்கியங்களைப் பயின்றுவிட்டால் வாழ்க்கையைப் பயின்றுவிட்டதாகப் பொருளாகும், வாழ்வியல் சிந்தனைகளைக் கற்போம். இப்புவியில் இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்.
கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07
No comments:
Post a Comment