"மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு நினைக்கத் தெரியாதா?"
"என்னை
மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு
நினைக்கத் தெரியாதா இவனை?
உறக்கம்
இன்றி தவிக்கும் உள்ளத்தை
ஒரு தரம் வந்து பார்க்காயோ?"
"இரக்கம்
அற்று பிரிந்து போனவளே
உருக்கமாக
உன்னைக் நான் கேட்கிறேன்?
மயக்கும்
கண்களால் கொள்ளை அடித்தவளே
தயக்கம்
இன்றி நினைத்து பார்க்காயோ?"
"தேடி
வந்தாய் தேனாய் கதைத்தாயே
தேவை
முடித்ததும் துள்ளி ஓடிவிட்டாயே?
தேவதையே
ஒருதரம் திரும்பி பார்க்காயோ
தேரில்
வந்தவன் நடந்து போறானே?"
"உயிரின் உயிரே!"
"அன்பு
கொண்டு .... அருகில் வந்தேன்
ஆதரவு
சொல்லி .... ஆசை வளர்த்தாயே!
இன்பம்
மலர்ந்து .... இருவரும் சேர்ந்தோம்
ஈருடல்
ஒன்றானோம் .... ஈரமான ரோசாவே!
உலகம்
மறந்து .... உவகை கொண்டோமே!"
"ஊமை
விழியில் .... ஊர்வலம் சென்று
எழுச்சி
கொண்ட .... எம் காதலே!
ஏமாற்றாமல்
இவனின் .... ஏக்கம் தணியாயோ
ஐம்புலனும்
தேடும் .... ஐயமற்ற அழகியே!
ஒப்பில்லா
என் .... உயிரின் உயிரே!"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment