"ஞாபகம்
வருதே"
"ஞாபகம்
வருதே ஞாபகம் வருதே
அத்தியடியில்
நான் பிறந்த வீடு
முற்றத்தில்
அம்மா சூரிய வணக்கம்!
சிறிய
சாளரத்தால் கதிரவன் எட்டிப்பார்க்க
கோடியில்
நாங்கள் கூத்து ஆட்டம்!!
"பழைய
நினைவுகளின் கதவு திறக்க
வெட்டிய
மரங்கள் வெக்கை தர
பதுங்கு
குழியிலும் அக்கா ஒப்பனை!
வெதும்பி
வாங்கவும் நீண்ட வரிசை
வெறுத்த
வாழ்வுக்கு ஒதுங்கவும் இடமில்லை!!"
"போனால் போகட்டும் போடா"
"போனால்
போகட்டும் போடா மனிதா
போதை
போனதும் தெரியுது உலகமடா
ஆசை
கொண்டு துள்ளித் திரிந்தேனே
ஆரவாரம்
செய்யாமல் அடங்கிப் போனேனே!"
"ஈன
இரக்கமின்றி அகந்தை கொண்டேனே
ஈரக்கண்
பலருக்கு என்னால் நனைந்ததே
ஈன்ற
பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே
இன்று
பாடை தூக்கவும் யாருமில்லையே!"
"ஊடல்
கொண்டு சென்ற மனைவியை
கூடல்
கொண்டு அள்ளி அணைக்காமல்
தேடி
ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே
ஊமையாய்
இன்று உறங்கிக் கிடக்கிறேனே!"
"உண்மை
இல்லா பற்றில் பாசத்தில்
உணர்ச்சி
மட்டும் வாழ்வென நம்பி
உள்ளதையும்
இழந்து நோயையும் பிடித்து
ஒதுங்கி
தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment