'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பூதாகரமாகும்  விவகாரம்: 


மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி என எங்கு சென்றாலும் அலமாரிகளில் பல பானங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். மக்கள் இந்த பானங்களை பார்த்தவுடனேயே ஆரோக்கியமானது என எண்ணி வாங்கிச் செல்கின்றனர்.

 

உண்மையில் அவை ஆரோக்கியமானதா?

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

 

இதுகுறித்து டாக்டர் ராஜீவ் கோவில் விளக்கமளிக்கையில், ‘‘இந்தியாவில் 100 கிராம் அளவை வைத்துத்தான் உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும்.

 

விளம்பர உத்திகளைக் கையாளும் நிறுவனங்கள்

இது நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பர உத்தி என்றும், ஆரோக்கிய பானம் என்று எதுவும் இல்லை என்றும் மும்பையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மூத்த மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ என்று சொல்லலாம். சர்க்கரையைத் தவிர, இந்த பானங்கள் அனைத்திலும் கார்ன் சிரப் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இணையதளத்திலும் இந்த ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கலவை அல்லது பானங்கள் குழந்தைக்கு அதிக சர்க்கரையை உட்செலுத்துவதாக பிரியங்க் கனுங்கோ கூறுகிறார்.

சர்க்கரையைப் பெற இத்தகைய பானங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அவர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படக்கூடும்.

தொற்றாத நோய் என்பது எந்தவொரு நோய்த்தொற்றாலும் ஏற்படாத, ஆரோக்கியமற்ற நடத்தையால் ஏற்படும் நோய்.

இதுபோன்ற பல பிரச்னைகளை இந்த பானங்கள் ஏற்படுத்தலாம்.

>உடல் எடை அதிகரிப்பு

>உடல் பருமன்

>சர்க்கரை நோய்

உதாரணமாக, பிஸ்கெட்டில் சர்க்கரை தவிர உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்பானம் அல்லது ஆற்றல் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் கீழ் வருகின்றன.

சமீபத்தில், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழின் (பிஎம்ஜே) ஓர் ஆய்வறிக்கையில், `இது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உங்கள் தினசரி உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களை உண்டாக்கும். தொற்றாத நோய்களை அதிகரிக்கும்.

நன்றி:பிபிசி தமிழ்// சுசீலா சிங்

No comments:

Post a Comment