தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 08



அறிவியல் விழிப்புணா்வு

     இன்றைய வாழ்வில் அறிவியலில் வளா்ந்த நாடுகளே வளா்ந்த நாடுகளாக அறியப்படுகின்றன. அறிவியல் விழிப்புணா்வு இன்றைய வாழ்வில் அடிப்படையான ஒன்றாக உள்ளது. மேலைநாடுகளில் அறிவியல் வளா்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நம் மக்கள் அறிவியல் என்ற சொல்லையே இப்போதுதான் கண்டறிந்திருக்கிறார்கள்.

     முடங்கி கிடக்காதே! விரைவில் முன்னேற

     வழிபார்! முயன்றால் முன்னேற முடியும்.

     மூச்சு விட்டுக்கொண்டிருந்தவன் எல்லாம்

     மனிதன் இல்லை

     முயற்சி செய்து கொண்டிருப்பவன்

     மட்டுந்தான் மனிதன்        (பா.விஜய் சிந்தனைச் சிறகுகள்.) என்பார் பா.விஜய்

 

பொதுவுடமை

     இயற்கையின் மூலம் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் கவிஞர் வைரமுத்துவானம்பற்றி கவிதையில்

 

குனிந்து குனிந்து

கூன் விழுந்த மனிதா!

வான் பார்க்கநிமிர்

வானம் முழுக்க

உனக்கு

நீ ஏன்

வரப்புக்குப் போராடுகிறாய்?”

என்ற வரிகள் தொழிலாளர்களின் நிலையைச் சுட்டி, அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவது போல் அமைகிறது. இன்றைய வாழ்வில் அடிமைத்தனத்தை நீக்கி, சுய சிந்தனையோடு வாழவேண்டும் என்பதைநினைவூட்டுகிறது. குனிந்தே பழக்கப்பட்டவனுக்குத் திடீரென நிமிர முடியவில்லை. அதனால் குனிந்து கொண்டே செல்லாதே, உன் வாழ்கைத் தரத்தை உயர்த்தப்பார், இந்த வானம், பூ, எல்லாம் உனக்கு பிறகு எதற்குப் போராடுகிறாய் என்று கேள்விக்கேட்டு அவனைச் சிந்திக்க வைக்கிறார்.

கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07

0 comments:

Post a Comment