தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 06


கல்வி

     கல்வியின் மகத்துவத்தை உணா்ந்தவர்களே சான்றோர்கள். கல்வி கற்க வேண்டுமெனில் ஆசிரியா்க்கு உரிய மரியாதைசெலுத்தி கற்ற வேண்டும். ஆசிரியா்களைக் காப்பதும் மாணவா்களின் இன்றைய கடமையாகக் கூறப்படுகிறது. கல்வியானது தாயின் மனதையும் மாற்றும் ஆற்றல் பெற்றது. சாதி வேறுபாட்டைக் கூட மாற்றவல்ல சக்தி வாய்ந்தது கல்வி, அதனால் தான் ஔவையாரும் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறுகிறார்.

     கண்ணுடையோர் என்போர் கற்றோர்என்று வள்ளுவரும். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா விடுஎன்று புரட்சிக் கவிஞன் பாரதிதாசனும் எழுத்தறிவின் அவசியத்தை பாடினார்.

எழுத்து  விதைகள்

இதயங்களில் தூவப்படும்போது

செழித்துவளா்வது

ஒருதனி மனிதன் அல்ல

சமுதாயம்

என்று கவிஞா் மு.மேத்தா கல்விச் சிந்தனைகளை கல்வெட்டாய்ப் பதித்து வைத்துள்ளார்.

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க...


கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07

0 comments:

Post a Comment