ஈகை
ஈகை என்பது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றித் துன்புற்ற ஒருவர்க்கு அளித்தலாகும். பொருள் ஈட்டினால் மட்டுமே போதாது அதை ஈதலும் வேண்டும் அதனால்தான் புறநானூறு,
“செல்வத்துப் பயனே ஈதல்” (8-புறநானூறு) என்கிறது.
“ஆற்றுதல் என்பது அலந்தவா்க்கு உதவுதல்” எனக் கலித்தொகை சுட்டுகிறது. தோண்டத் தோண்ட நீா் ஊறுவது போலக் கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் என்ற கருத்தும் நிலவியது. சான்றோரின் நெறியிலே வாழ்ந்தவன் ஆய் அண்டிரன் புறநானூற்றிலே அவனைப் பற்றி ஒரு செய்தி,
”இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வாணிக னாயலன் பிறகும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன் கைவண்மையே” (134-புறநானூறு)
அடுத்தவா்க்கு கொடுத்தல் என்பதை வாழ்வில் தலையாயக் கடமையாக மதித்துள்ளனா் அக்கால மக்கள். கபிலா் பாரியின் ஈகையைப் பின்வருமாறு சுட்டுவா்.
”முந்நூறு ஊறும் பாசிலா் பெற்றனா்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டுநீா் பாடினீா் செலினே” (110-புறநானூறு)
தமக்கென எதையும் சோ்த்து வைக்காது ஈகை செய்து இன்புற்று மகிழ்ந்தனா் என்று மன்னா் தம் கொடைப் பண்பினைக் குறிப்பிடுகின்றது. இதைத்தான் பின்னால் வந்த ஒரு திரைப்படக் கவிஞன்
“அள்ளிக் கொடுத்து
வாழ்பவா் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு” என்றான். எனவே ஈகை வாழ்வில் நிகழ்வில் முக்கியத்தவம் பெற்றது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.
கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07
No comments:
Post a Comment