விருந்தோம்பல்
சங்ககால மக்கள் ஈதலையும் விருந்தோம்புதலையும் இரு கண்களாகக் கருதி அவற்றை வாழ்வில் பின்பற்றி வந்தனா். விருந்து என்பதற்குப் புதுமை என்று விளக்கமளிக்கிறது தொல்காப்பியம். முன்பின் அறியாத புதியோர்க்கு எளிய உணவாயினும் அதனைப் பகிர்ந்தளித்து உண்ணும் குணம் சங்கத்தமிழா்களிடைய மிகுந்து இருந்தது.
நல்லியக்கோடன் தன்னை நாடி வந்த பாணா்களுக்குப் பரிசில் கொடுப்பது மட்டுமன்றி விருந்தோம்புதலிலும் குறைவில்லாதவன் தான் அரசனாக இருந்தபோது விருந்தளிக்கும் போது முன்னின்று செய்யக் கூடியவன்.
”பல்வேறு அடிசில்
விளங்கப் பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி .(.244-245 சிறுபாணாற்றுபடை) என்னும் அடிகள் இதற்குச் சான்று.
தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் விரும்பி தொடா்ந்து கடைப்பிடித்து வந்த வாழ்வியல் நிகழ்வு ஆகும். தமிழா் விருந்தினா் உண்டபின் எஞ்சிய உணவையே மகிழ்வுடன் உண்டனா். இதனை
“விருந்து உண்டு எஞ்சிய மிச்சம் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது” என்னும் அடிகள் மூலம் அறியலாம்.
கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07
0 comments:
Post a Comment