"கொடிது கொடிது "
"கொடிது கொடிது
வறுமை கொடிது
இளமையில் முதுமையில் வாழ்வது
கடிது!
படித்த அறிவுக்கு வேலை இல்லை
பட்டம் பெற்றும் தெருவில் நிற்கிறோம்!"
"நீதியான அரசு இல்லாத
வரை
நிதிகளை அளவாக செலவளிக்காத
வரை
நித்தமும் மக்கள் வரிசையில்
நிற்பர்
நிதானம் இழந்து குழப்பம்
செய்வர்!"
"இல்லாமை இல்லாமல் ஒழிக்க
வேண்டும்
இருப்பதை பிரித்து பகிர வேண்டும்
இன்பம் துன்பம் இரண்டும்
உணரவேண்டும்
இயல்பான வாழ்வு சொர்க்கம்
ஆகுமே!"
“தண்ணீரில் கண்ணீர் கரைகிறது"
"காற்றும் மழையும் ஒன்று சேர
ஆற்றல் சக்தி எல்லை மீற
ஏற்றம் இறக்கம் இடைவெளி தெரிய
அற்ப மனிதர்களின் திறமை புரிந்தது!"
"சாலை வழியே படகு ஓடுது
ஓலைக் குடிசை திறந்து கிடக்குது
மூலை முடுக்கு குப்பை குவியுது
வலை வீசி அதிகாரியை தேடினம்!"
"கள்ளக் கணக்கில் நகரம் அமைத்து
அள்ள முடிந்த பணத்தை சுருட்டி
உள்ளக அமைப்பை சீர் குழைத்து
வெள்ளத் தண்ணீரில் கண்ணீர் கரைகிறது"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment