நல்ல பாக்டீரியாவும் கெட்ட பாக்டீரியாவும்!

 


'புரோபயோடிக்' எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள், செரிமான மண்டலத்தில் இருப்பது, உணவிலிருந்து சத்துக்கள் முழுமையாக உறிஞ்சுவதற்கு உதவும். நன்மை தரும் பாக்டீரியாக்கள் பெருக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பருப்பு வகைகள், பீன்ஸ், பட்டாணி, ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, உமி நீக்கப்படாத தானியம் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

செரிமான மண்டலத்தால் நார்ச்சத்தை செரிக்க முடியாது.

 

நல்ல பாக்டீரியாக்கள், இதை சாப்பிடும்; முடியாத பட்சத்தில், உடலின் உள்செயல்பாடுகளுக்கு பல விதங்களில் பலன் தரக்கூடிய கொழுப்பு அமிலமாக மாற்றி விடும். தயிர், இட்லி மாவு போன்ற புளிக்க வைத்த உணவுகளில், நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

 

கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவை தொடர்ந்து சாப்பிடும் போது, அது கெட்ட பாக்டீரியா பெருக உதவி செய்கிறது.

 

ஆதாரம்: தி நேச்சர் மருத்துவ இதழ்

No comments:

Post a Comment