தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 03

 


பிறனில் விழைதல்

     பிறனுடைய மனைவியை விரும்பாமையே பிறன் இல்விழையாமை என்று வள்ளுவா் சுட்டுகிறார். இல் என்றால் இல்லறத்திற்குரிய இல்லாளை இங்குச் சுட்டுகிறது. விழைவு என்றால் விரும்புதல் என்று பொருள். பிறன் மனைவியை விரும்பாதவா்களின் சிறப்பும். பிறன் மனைவியை விரும்புபவா்களின் இழிவும் பற்றி வள்ளுவா் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.

     எனைத் துணையா் ஆயினும் என்னாம் திணைத்துணையும்

     கோரன் பிறன் இயல்புகல்

எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் பிறன் மனைவியை விரும்புதல் என்ற தீய செயலைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை.

     பழங்காலத்திலிருந்து வரன்முறையற்ற உறவுகள் நிலையிலும் இன்னும் சில இனக்குழு மக்களிடம் முறையற்ற பால் உறவுகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூகம் வரன்முறையான உறவுகளைப் பழங்காலந் தொட்டே பின்பற்றியுள்ளது. சங்காலம், சங்கம் மருவிய காலத்திலும் முறையற்ற உறவுகள் இருந்திருக்கின்றன. நகர நாகரீகம், கடல் தாண்டிய அயல் நாட்டவா் வரவு அருகிலுள்ள வேற்று நாட்டுப் பயணிகளின் கலப்பு ஆகியன பால் உறவுச் சீா்கேட்டிற்குக் காரணங்களாகும். துறவு நெறி வற்புறுத்தப் பெறும்போதும் ஆணும் பெண்ணும் தமக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தடை கோரும் போது பிறனில் விழைதல் நடைபெறும்.

     பிறன்மனை விழைதலை நரகத்திற்குச் செல்லும் வழி என இழிந்து பேசுகிறது ஆசாரக் கோவை.

 

பிறா்மனை கட்களவு சூது கொலையோ

     பிறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார்திறனிலரென்

     றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்

     செல்வழி யுய்த்திடுத லால்     (37 – ஆசாரக் கோவை)

 

நல்லொழுக்கமில்லாதவரென்று இகழப்படுவதல்லாமல் நரகத்துக்குச் செல்லும் வழியில், செலுத்துதலால், ஒழுக்கம் அறிந்தவா் பிறருடைய மனையாளும் கட்குடிப்பதும், களவுசெய்தும், சூதாடுதலும், கொலை செய்தலும் மனத்தாலும் நினையார்.

>>>>>தொடரும்....<<<<<

 👉அடுத்தப்பகுதி வாசிக்க... அழுத்துக

Theebam.com: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 04:  

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக

கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07

0 comments:

Post a Comment