“வரமாக வந்தவளே"
"வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே
உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே
தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே
ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே
கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!"
"தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க
சரமாலை கொண்டையில் அழகாக ஆட
ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து
காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே
மரணம் பிரித்தாலும் மறவேன் உன்னை!"
"விடியல் தேடும் விண்மீன் பெண்ணே!"
"விடியல்
தேடும் விண்மீன் பெண்ணே
மடியில்
உன்னை உறங்க வைத்து
மாடியில்
நிலா ஒளியில் காய்ந்து
ஆடியில்
மங்களம் நாள் பார்த்து
வாடிய
முகத்திற்கு புன்னகை தருவேன்!"
"மூடிய
இதயங்களின் கதவைத் திறந்து
நாடிய
சமத்துவம் அதில் வளர்த்து
தேடிய
இன்பம் அங்கே கொட்டி
நீடிய
வாழ்வுக்கு வழி வகுத்து
கூடிய
உறவை வலுப் படுத்துவேன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment