"அலை
எதிரே முட்டி மோதி
வலை
வலையாய் தூக்கி வீசி
உலை
வைத்து கறி சமைக்க
ஓலைக்
குடிசை மகிழ்ந்து வாழ
காலை
நேரம் மீன் பிடிக்கிறான்!”
"மரத்
தோணியில் கடலை அளந்து
மகர
மீன் பல பிடித்து
மகிழ்ச்சி
பொங்க கரை வந்து
மண்ணைத்
தொட்டு வானை வணங்கி
மனையாள்
முகம் கண்டு மலர்கிறான்.!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment