"வாழ்க்கையின் திரைச்சீலையில்
இதயங்கள்
நடனமாடினால்
ஒற்றுமையே நாம் பாடும் பாடலாகுமே!
வலுவான கோட்டையாக ஒன்றாக நின்றால்
இணக்கமான இசையுடன்
மெல்லிசை இனிக்குமே!"
"ஒன்றிணைந்து நாம்
சோதனைகளை வென்றால்
ஒருவருக்கொருவர்
தனித்துவமான அன்பு தழுவுமே!
திறப்பதற்கான திறவுகோல்
தொடர்புகள்
மட்டுமானால்
இருளை அகற்றி
அங்கே ஒளிரச்செய்யுமே!"
"கருணை பிணைக்கும்
பசையாக
இருந்தால்
நம் இதயங்கள் ஒன்றாக துடிக்குமே!
நாம் அடையும் அன்புக்குச் சான்றாக
உறவோடு ஒற்றுமை ஒளிரட்டும் என்றுமே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment