500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? -உடல்நலம்

உடலில் 500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? 'டாட்டூ' ஆபத்தா?

கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ஆம் ஆண்டளவில் எச்..வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

கல்லீரல் அழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

"ஒரு வாழ்க்கை, ஒரு கல்லீரல்" என்ற கருப்பொருளின் கீழ், இந்த ஆண்டு உலக ஹெபடைடிஸ் தினம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் முக்கியத்துவத்தையும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் நோயைத் தடுக்கவும் மற்றும் 2030 ஹெபடைடிஸ் ஒழிப்பு இலக்குகளை அடையவும் வைரஸ் ஹெபடைடிஸ் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?

மனிதர்களின் உடலில் உள்ள மூளை, இதயம் போன்ற மற்றொரு முக்கிய உறுப்பு கல்லீரல். உடலுக்கு தேவையான பல்வேறு செயல்களை கல்லீரல் மேற்கொள்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது, உடலுக்கு தேவையான சில புரதச்சத்துக்களையும் (நமது உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால் அதனை உறைய வைப்பதற்கு உதவும் த்ரோம்போபோயிட்டின் என்ற புரதம் இதில் முக்கியமானது) உற்பத்தி செய்வது, உணவில் உள்ள நச்சை நச்சற்றத்தாக மாற்றுவது போன்றவை கல்லீரலில் முக்கிய பணிகளாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு செரிமானம், புரத உற்பத்தி, சேமித்தல், நச்சற்றத்தாக மாற்றுதல் என ஏறக்குறைய 500 முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது. நமது கல்லீரலை பாதிக்கக்கூடிய இரண்டு பிரதான விஷயங்களாக மதுவும், வைரஸ் தொற்றும் உள்ளன. சுகாதாரமற்ற உணவு, போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் கல்லீரலை பாதிக்கிறது.

 

கல்லீரல் அழற்சி என்றால் என்ன?

கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம் கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீரை உட்கொள்ளுதல் போன்றவை கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றன.

 

கல்லீரல் அழற்சியின் வகைகள்

ஹெபடைடிஸ் வைரஸில் 5 வகைகள் இருந்தாலும் அதில் பி, சி ஆகிய வைரஸ் தான் தீவிர தன்மை வாய்ந்தது என்று கூறுகிறார் எம்ஜிஎம் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை சிறப்பு நிபுணரான மருத்துவர் எஸ். அருள்பிரகாஷ்.

ஹெபடைடிஸ் : அதிகளவில் பரவக்கூடிய வைரஸாக ஹெபடைடிஸ் மற்றும் உள்ளன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதால் ஹெபடைடிஸ் பரவுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமே இருக்கும்.

ஹெபடைடிஸ் பி: பாதுகாப்பற்ற உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது, ரத்தம் மாற்றுவது, பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு போன்றவை மூலம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸின் பாதிப்பு ஆரம்ப நாட்களில் நமக்கு தெரியாது. நீண்ட நாட்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹெபடைடிஸ் சி: ஹெபடைடிஸ் பி போன்றே உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் ஹெபடைடிஸ் சி ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டுமே நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த வைரஸ்கள் உடலிலேயே தங்கி பல ஆண்டுகள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹெபடைடிஸ் டி: இது மிகவும் அரிதானது. ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுடன் தொடர்புடையது. அதாவது ஹெபடைடிஸ் பி தொற்று பாதிப்பு இல்லாமல் ஒருவருக்கு ஹெபடைடிஸ் டி ஏற்படாது.

ஹெபடைடிஸ் : கர்ப்பிணி பெண்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஹெபடைடிஸ் -வை போன்று ஹெபடைடிஸ் -யும் தண்ணீருடன் தொடர்புடையது. மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. மலம் கலந்த தண்ணீரை உட்கொள்வதால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

 

கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் என்ன?

<காய்ச்சல்

<உடல் சோர்வு

<தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை)

<அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்

<குமட்டல் மற்றும் வாந்தி

<வயிற்று வலி

<ரத்த வாந்தி

 

கல்லீரல் அழற்சியால் ஏற்படும் பாதிப்பு

ஹெபடைடிஸ் , காரணமாக ஒரு சிலர் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளடைவதில் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய முடியாது. இதையே சிர்ரோசிஸ் என்று அழைக்கின்றனர். சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டுவிட்டால், குணப்படுத்துவது கடினம்.

"கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்துவிடும், மயக்க நிலை ஏற்படும், ரத்த வாந்தி ஏற்படலாம். தீவிரம் அடைந்து மஞ்சள் காமாலை நோயையும் ஏற்படுத்துகிறது. மற்றொரு முக்கிய விஷயம் ஹெபடைடிஸ் பி காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம். " என்று எச்சரிக்கிறார்.

 

சிகிச்சைகள் என்ன?

ஹெபடைடிஸ் , போன்றவை பெரும்பாலும் தானாகவே சரி ஆகிவிடும் என்கிறார் அருள் பிரகாஷ்.

" அதே நேரத்தில், ஹெபடைடிஸ் காரணமாக வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஹெபடைடிஸ் -க்கு என்று குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இது தானாவே சரி ஆகிவிடும். போதிய நீர்ச்சத்துகளை எடுத்துகொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஹெபடைடிஸ் , பி வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் உள்ளன. இதற்கு மூன்று ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போட்டு 1 மாதம் கழித்து இரண்டாவது ஊசி, 6 மாதம் கழித்து மூன்றாவது ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ் சி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் உள்ளன. ஆனால், இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை வந்துவிட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டி வைரல் மாத்திரைகள் உள்ளன" என்றார்.

"சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டு கல்லீரல் செயலிழந்துவிட்டால் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் புதுவாழ்வு பெறலாம் " என்றும் அவர் தெரிவித்தார்.

கல்லீரல் தானமாக கிடைப்பது என்பதை தேவைக்கு குறைவாகவே உள்ளது. மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு தானம் ஏற்படுத்துவது மூலம் இந்த நிலையை மாற்ற முடியும் என்றும் அருள் பிரகாஷ் கூறுகிறார்.

 

கல்லீரல் அழற்சியில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

பொதுவாக கல்லீரல் அழற்சியை அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று அழைக்கின்றனர். காரணம், இதனால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் அது குறித்து எதுவும் அறியாமல் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கல்லீரல் அழற்சியை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கு முடியும் .

"நமது சுற்றத்தை சுத்தமாக வைத்திருப்பது மூலம் ஹெபடைடிஸ் , போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பாக கைகளை கழுவது, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை சுத்தமாக கழுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

ஊசிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மூலம் ஹெபடைடிஸ் சி வராமல் பார்த்துக்கொள்ளலாம். டாட்டூ போடும் இடங்கள், முடி திருத்தகம் போன்ற இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஊசி, பிளேடு) மீண்டும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது மூலமும் ஹெபடைடிஸ் பி, சி ஏற்படாமல் தவிர்க்கலாம்" என்று அருள் பிரகாஷ் தெரிவித்தார்.

ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை முன்பு அதிகமாக பரவிக்கொண்டிருந்தது. தற்போது இது குறைந்துவிட்டது. ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு நாம் இப்போது பயன்படுத்துவது இல்லை. இதேபோல், ஹெபடைடிஸ் பி தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நிலையில், தற்போது குழந்தைகளுக்கு பிரசவத்தின்போதே தடுப்பூசி போடப்படுகின்றன. இதனால், ஹெபடைடிஸ் பி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

நன்றி: முருகேஷ் மாடக்கண்ணு/பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment