/
"FOOD HABITS OF TAMILS" PART: 33 "இன்றைய தமிழரின் உணவு
பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of present Tamils
continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]
இன்றைய தமிழர்கள் மத்தியில், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் வருவது மெதுவாக
இருந்தாலும் அதற்கான சில அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டன. உதாரணமாக நகரப்புறங்களில்
கோதுமை மா கூடுதலாக பாவிக்கப் படுவதுடன், அரிசிக்குப் பதிலாக இரவு உணவுகளில் சப்பாத்தி
பாவிக்கப் படுகிறது. அதே போல பூரி, உருளைக்கிளங்கு போன்றவை காலை உணவாக பயன்படுத்தப்
படுகிறது. எது எப்படியாயினும் சப்பாத்தி, பூரி போன்றவை தமிழரின் பாரம்பரிய உணவாக கருதப்
படுவதில்லை. பாரம்பரிய உணவு என்பது, எமது மூதாதையர்களால், பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக
உணவு தொழில் மயமாக்கலுக்கு முன், உண்ணப் பட்டவையாகும். இது ஒரு இனத்தின் அடையாளமாகக்
கூட கருதப்படுகிறது. இந்த தொழில் மயமாக்கல் அதிகமாக 19ம் நுற்றாண்டு தொடக்கத்திலேயே
பெரும் பாலும் ஆரம்பிக்கப் பட்டது. நகர புறங்களில் இன்று பெருமளவு துருப்பிடிக்காத
உருக்கு இரும்பினால் செய்யப் பட்ட முள்கரண்டி, வெட்டும் கருவிகள் போன்ற சாப்பிடுவதற்கும்
பரிமாறுவதற்குமான கருவிகள் மற்றும் பீங்கான் பாண்டங்கள் அல்லது மண் பாத்திரங்கள் பாவிக்கப்
பட்டாலும், விழாக்காலங்களிலும் கொண்டாட்ட காலங்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவது
இன்னும் வழமையாகவே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட சங்க காலத்திலும் உணவு
இப்படி வாழை இலையில் பரிமாறப் பட்டதாக புறநானுறு 168 குறிப்பிடுகிறது.
"மரையான் கறந்த நுரை கொள் தீம் பால், மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி,
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றிச், சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில், செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"
அதாவது, மரையான் என்னும் காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான்
தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல்
உலைவைத்து, சந்தன விறகில் தீ மூட்டிச் சோற்றை சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில்
கூதளம்பூ [காட்டு மல்லிகை] பூத்துக் கிடக்கும். அப்படி மல்லிகை மணக்கும் முற்றத்தில்
வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை
மலைத் தலைவனே! என்கிறது இந்த பாடல்.
உணவைப் பற்றி ஒருவர் கூறும் போது, எமது மனதில் தோன்றுவது சுவை எப்படி இருக்கும்
என்பதே. சுவையில்லா உணவு, உணவாக கருதப்படுவதே இல்லை. அதனால் தான் "உப்பில்லாத
பண்டம் குப்பையிலே" என ஒரு பழமொழி சொல்லி வைத்தான் போலும்! சுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும். மேற்கத்தியர்
அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு என்பனவாகும். தமிழர்
முறைப்படி ஆறு வகை சுவை என்பர். அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு,
துவர்ப்பு என்பன வாகும். இந்த அறுசுவையும் சேர்ந்த உணவு ஒன்றையே முழுமையான உணவு என
தமிழர் கருதுகின்றனர். ஆகவே, எல்லா ஆறு சுவைகளையும் கொண்ட ஒரு உணவை கொடுப்பதற்காக பண்டைய
தமிழன் அகன்ற வாழை இலையை தேர்ந்து எடுத்தான். அந்த இலையை நுனி இடது பக்கம் நோக்கி இருக்கக்
கூடியதாக விருந்தினர் முன் பரப்பினான். இதற்கு காரணம் பெரும்பாலானோர் வலது கை பாவித்து
உணவு உண்பதால் ஆகும். அதிகமாக பரிமாறல் உப்பு ,ஊறுகாய் போன்றவற்றுடன் ஆரம்பிக்கின்றன.
இவை பொதுவாக கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் இடது பக்கம் வைக்கப்படுகிறது. ஆகவே
உணவுடன் இவை எளிதில் கலக்காது. முதலாவது உணவு இனிப்பு ஆகும்.எல்லா ஆரம்பமும் இனிமையாக
மலரட்டும் என்பதால், மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவையான இனிப்புடன் தொடங்கப்
படுகிறது. குழந்தையின் முதலாவது உணவு தொடங்கி, மணமக்களின் முதல் பானம் வரை இப்படித்தான்
தமிழர் வாழ்வில் இருக்கிறது. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக
உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் வலது பக்கம் வைக்கப்படுகிறது. நடுவில் முக்கிய
உணவான சோறு - நடுவிலும் கீழ் பாதி இலையிலும், அதை சுற்றி மேல் பாதி இலையில் பலதரப்
பட்ட மரக்கறி உணவுகள் [கூட்டு அவியல் வறுவல்], பச்சடி, அப்பளம் போன்றவை வைக்கப் படுகின்றன.
விருந்தினரை கவனித்து தேவையான உணவு வகைகளை மீண்டும் நிரப்பு கிறார்கள். வேண்டாம் என்றாலும்
விடுவதில்லை. மாமிசம் உண்பவர்கள் கூட,பொதுவாக, விழாக் காலங்களில் மரக்கறி உணவே உண்ணுகிறார்கள்.
தமிழர்களின், ஒவ்வொரு விழாவும் கொண்டாட்டமும் அதற்கே உரிய பாரம்பரிய உணவுப்
பட்டியலை கொண்டுள்ளன. குழந்தைக்கு பொதுவாக ஏழாவது மாதத்தில் கொடுக்கப்படும் அரிசி உணவு
அதிகமாக சர்க்கரை பொங்கலாக இருக்கும். அதே போல குழந்தைக்கு முதல் பல் முளைத்தலை பல்
கொழுக்கட்டையுடன் கொண்டாடுகிறார்கள். அப்படியே சாமத்திய சடங்கில் - பால், வாழைபழம்,
கற்கண்டு அல்லது பாற்சோறும், சீமந்த விழாவில் பலதரப்பட்ட அரிசி சாதமும் வைக்கிறார்கள்
/ படைக்கிறார்கள்.
நன்றி :[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி :
34 தொடரும்
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"- பகுதி: 34
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:
"FOOD HABITS OF TAMILS" PART: 33
"Food Habits Of present Tamils
continuing"
Among today's Tamils, the change in eating habits is slow but some signs
of it can be seen. Wheat is being increasingly used in urban areas. Chappathi
(wheat flour pancake) may be substituted for rice, especially for dinner, and
poori (a deep-fried wheat pancake) and potato be served as breakfast. Though
stainless steel cutlery and crockery are used in urban homes, food is still
served on special and festive occasions and while honoured guests-in the
traditional way-on a banana leaf / plantain leaves become a compulsory part of
the treat. Even during the Sangam period food is served on banana leaf & it
was mentioned in, over 2000 year old, Purananuru 168
"the Kuravans harvest the fresh growth so that they may eat well.
They pour sweet foaming milk from a wild
cow into an unwashed pot that smells of
boiled venison, its broad sides white with fat, and they set the pot on the fire. Then, in the open, where
it is lovely with wild jasmine and
nightshade flowers, they eat their rice
cooked over sandalwood branches, sharing it out on the wide leaves of plantain trees that grow dense
clusters of fruit!"
The word taste strikes the mind if one speaks about food. Tasteless food
is not considered as food. The food item is considered as complete food only if
it has all six tastes of food. So, to provide all six tasty food, wide banana
leaf is chosen and the leaf is spread in front of the diner, with the tip
pointed left, as most of the people use right hand. Serving begins with salt
and pickle being placed at the extreme left. The first course is sweet --
everything has to begin with a sweet, whether it is an infant's first solid
meal or the newly- wed's first drink. The series of vegetable dishes, pachadi
(a vegetable and curd salad) and the crisp appalam, all of which go with the
various rice courses, are placed on the
top half of the leaf. Rice in the middle & banana bottom half right. With
every course the leaf is carefully replenished, the diner's protests being
totally ignored. Even among non-vegetarians, ceremonial feasts are always
vegetarian.
Every festival and ceremony has a traditional menu. The first rice meal
given to a baby in the seventh month is sarkarai pongal, a combination of
rice-milk, sugar and ghee. The teething of a child calls for pal kozhukkattai
(tiny rice flakes resembling teeth, cooked in milk with sugar).The coming of
age of a daughter is an important family event, as it is in all traditional
communities. Milk, banana and sugar are give to the girl and to all
well-wishers who visit her. Seemandam,
celebrated in the seventh or ninth month of pregnancy, calls for a variety of
rice preparations.
Thanks:[Kandiah
Thillaivinayagalingam, Athiady, Jaffna]
PART : 34 WILL FOLLOW
No comments:
Post a Comment