''தீயவைகள் அகன்றிட...'' & '' "சாதிக் கொடுமை"

"தீயவைகள் அகன்றிடத் தீபவொளி ஏற்று"

 


"ஆழமாக புராணங்களைக் கற்று அறியாயோ?

ஊழல் பல போரில் செய்தவனை

ஈழ வேந்தனின் உயிரைக் காவியவனை

அழகு படுத்தாதே உன்னைக் அவமதிக்காதே!"

 

"வருடங்கள் தோறும் கொண்டாட்டம் வரலாம்?

எருமைகளைப் போல ஈரத்தில் படுக்காமல்

கருத்தினை அறிந்து நோக்கத்தைப் புரிந்து

இருளை அகற்றி ஒளிர்வாய் உலகிலே!"

 

"ஆய கலைகள் அறுபத்துநான்கினைப் கற்றவனே!

மாய இதிகாசத்தின் உண்மை அறிந்து

தூய தமிழன் ராவணனைப் போற்றி

தீயவைகள் அகன்றிடத் தீபவொளி ஏற்று!

 

"சாதிக் கொடுமை"

 

"சாதிக் கொடுமை புகுந்தவன் தந்தது

ஆதித் தமிழனிடம் இல்லாத ஒன்று!

சேதி பல புராணத்தில் கூறி

பாதி பாதியாய் எம்மைப் பிரித்து

ஊதி ஓதி வகுத்ததே சாதிக்கொடுமை!"

 

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்

நன்றே சொன்னான் மானிடம் காத்தான்!

அன்றே கூறினான் அழகாகப் பாடினான்

துணிந்து கேட்டான் சிந்திக்க வைத்தான்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?"

 

-:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment