தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள் /Tamil movie songs lyrics

பாடல்கள்

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே// உன்னை ஒன்று கே..ட்பேன்//கொடி அசைந்ததும் (ம்...) காற்று வந்ததா//ஒளிமயமான எதிர்காலம்// கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா//கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்// பால் வண்ணம் பருவம் கண்டு// பார்த்த ஞாபகம் இல்லையோ // முத்துக்கு முத்தாக // மாசிலா உண்மை காதலே//  குங்குமப் பூவே..கொஞ்சு புறாவே.. //அத்திக்காய் காய் காய்ஆலங்காய்//  நான் மலரோடு தனியாக...// அம்மா....

நீ சுமந்த 

திரைப்படம்அன்பு எங்கே? (1958)

பாடலாசிரியர்வி சீதாராமன்

பாடியவர்: டி. எம் சௌந்தரராஜன்

இசைஎஸ். வேதாச்சலம்

ஆண் : ஹேய்…….யா…….டிங்கிரி டிங்காலே

மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஹா, டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

//////////////////

ஆண் : அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு

அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு

////

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு

அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு

அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம்

அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து

சிரிக்குதென்ன செய்வோம்

ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

-டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

///////////////

ஆண் : ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா

அந்தஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா,, ஹஹான்

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா

அந்தஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா

அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி

ஐயா வாயில் புகையுது பார்,, ஐயம், வெரி, சாரி

ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

[ஆண் : ஹஹா ஹாஹ்ஹா ஹஹா ஹாஹ்ஹா]

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

///////////////

ஆண் : கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்ர்

காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்ர்ர்

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்ர்

காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்ர்

குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச

குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

[ஆண் : ஹஹா ஹாஹ்ஹா ஹஹா ஹாஹ்ஹா]

குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

/////////////////

ஆண் : கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டு.து

பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டு.து

கண்ணும் கண்ணும் பேசிக்குது, மூக்கும் மூக்கும் முட்டு.து

பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு, கையைக் காலை ஆட்டு.து

கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடு.து

காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடு.து

ஆண் : உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

[ஆண் : ஹஹா ஹாஹ்ஹா ஹஹா ஹாஹ்ஹா]

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஆண் : ….டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

குழு : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஆண் : ஹஹா ஹாஹ்ஹா

🌐🌐🌐🌐

திரைப்படம்: புதிய பறவை(1964)

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

பாடியவர்: பி.சுசீலா

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

உன்னை ஒன்று கே..ட்பேன்

உண்மை சொல்ல வே..ண்டும்

என்னைப் பாடச் சொன்..னால்

என்ன பாடத் தோ..ன்றும்

என்ன பாடத் தோ..ன்றும்

உன்னை ஒன்று கேட்..பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னைப் பாடச் சொன்..னால்

என்ன பாடத் தோ..ன்றும்

இசை

 

காதல் பாட்டு பா...

காலம் இன்னும் இல்லை..

காதல் பாட்டுப் பா...

காலம் இன்னும் இல்..லை

தா...லா...ட்டுப் பா...

தா...யாக வில்லை

உன்னை ஒன்று கே..ட்பேன்

உண்மை சொல்ல வே..ண்டும்

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

இசை

 

நிலவில்லா வா...னம்

நீ...ரில்லா மே...கம்

பே...சாத பெண்மை

பா....டா..து உண்மை

கண்ணை மெல்ல மூ..டும்

தன்னை எண்ணி வா...டும்

பெண்ணைப் பா...டச் சொன்னா...ல்

என்ன பாடத் தோ..ன்றும்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வே..ண்டும்

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோ..ன்றும்

இசை

 

தனிமையில் கா...னம்

சபையிலே மெளனம்..

உறவுதான் ரா...கம்

உயிரெல்லாம் பா...சம்

அன்பு கண்ட நெஞ்சில்

அனுபவம் இல்லை

என்னைப் பா...டச் சொன்னால்

என்ன பாடத் தோ..ன்றும்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வே..ண்டும்

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

என்ன பாடத் தோன்றும்

இசை

👌👌👌👌👌👌👌


திரைப்படம்: பார்த்தால் பசி தீரும்(1962)

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன், P.சுசீலா

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

 

பெண்: கொடி அசைந்ததும் ( ம்... )

காற்று வந்ததா ( ம்ஹும் )

காற்று வந்ததும் ( ஓஹோ )

கொடி அசைந்ததா

 

ஆண்: நிலவு வந்ததும் ( ம்... )

மலர் மலர்ந்ததா ( ம்ஹும் )

மலர் மலர்ந்ததால் ( ம்... )

நிலவு வந்ததா

 

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா

 

ஆண்: நிலவு வந்ததும்

மலர் மலர்ந்ததா

மலர் மலர்ந்ததால்

நிலவு வந்ததா

 

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா

இசை

 

பெண்: பாடல் வந்ததும் தாளம் வந்ததா

பாடல் வந்ததும் தாளம் வந்ததா

தாளம் வந்ததும் பாடல் வந்ததா

 

ஆண்: (Ba)பாவம் வந்ததும் ராகம் வந்ததா

(Ba)பாவம் வந்ததும் ராகம் வந்ததா

ராகம் வந்ததும் (Ba)பாவம் வந்ததா

 

பெண்: கண் திறந்ததும் காட்சி வந்ததா

காட்சி வந்ததும் கண் திறந்ததா

 

ஆண்: பருவம் வந்ததும் ஆசை வந்ததா

ஆசை வந்ததும் பருவம் வந்ததா

 

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா

இசை

 

பெண் :வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா

வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா

 

ஆண்: பெண்மை என்பதால் நாணம் வந்ததா

பெண்மை என்பதால் நாணம் வந்ததா

நாணம் வந்ததால் பெண்மை ஆனதா

 

பெண்: ஓடி வந்ததும் தேடி வந்ததும்

பாடி வந்ததும் பார்க்க வந்ததும்

 

ஆண்: காதல் என்பதா பாசம் என்பதா

கருணை என்பதா உரிமை என்பதா

 

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா

 

இருவர்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா

மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

ம்.... ம்.... ஓஹொஹோஹொ ஹோ

ம்.... ம்.... ... ...

🚤🚤🚤🚤🚤🚤🚤🚤🚤


திரைப்படம்: பச்சை விளக்கு(1964)

பாடலாசிரியர்கவிஞர் கண்ணதாசன்

பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இசை

 

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இசை

 

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

இசை

 

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்

வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

இசை

 

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இசை

 

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்

கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக

இசை

 

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்

கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக

மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக

வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

இசை

 

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

🌅🌅🌅🌅🌅🌅


படம்: ஆலயமணி(1962)

பாடியவர்கள்: L.R.ஈஸ்வரி, T.M.சௌந்தராஜன்

பாடல் ஆசிரியர்: கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

 

பெண் ஆஹா ஹா... ஆஹ ஹாஹாஹா...

( இசை )

ஆஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆஹா ஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆண் கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும்

கலையாகுமா

( இசை )

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும்

கலையாகுமா

சொல்லெல்லாம் தூய

தமிழ் சொல்லாகுமா

சுவையெல்லாம் இதழ்

சிந்தும் சுவையாகுமா

சொல்லெல்லாம் தூய

தமிழ் சொல்லாகுமா

சுவையெல்லாம் இதழ்

சிந்தும் சுவையாகுமா

பெண் ஆஹா... ... ஆஹா ஹா...

 

ஆண் கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும்

கலையாகுமா

( இசை )

 

ஆண் கன்னித் தமிழ் தந்ததொரு

திருவாசகம்

கல்லை கனி ஆக்கும்

உந்தன் ஒரு வாசகம்

கன்னித் தமிழ் தந்ததொரு

ிருவாசகம்

கல்லை கனி ஆக்கும்

உந்தன் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வதுந்தன்

கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

( இசை )

உண்டென்று சொல்வதுந்தன்

கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

இல்லையென்று சொல்வதுந்தன்

இடையல்லவா

மின்னல் இடையல்லவா

 

பெண் ஆஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆஹா ஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆண் கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும்

கலையாகுமா

( இசை )

 

பெண் ... ... ... ...

ஆண் கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி

என்றும் நீயே கதி

 

பெண் ஆஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆஹா ஹா ஹா... ஆஹா ஹா ஹா...

ஆண் கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும்

கலையாகுமா

பெண் ...

💎💎💎💎💎💎💎💎💎💎💎


படம் : சந்திரமுகி(2005)

பாடல் ஆசிரியர்: யுகபாரதி

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள்:ஆஷாபோஸ்லே,மதுபாலகிருஷ்ணன்


பெண்:கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா

ஆண்: கொஞ்சும் நேரம்

கொஞ்சும் நேரம்

எல்லை மீறக் கூடாதா…

இந்த நேரம் இன்ப நேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா

பெண் : கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா

 🎻🎻🎻🎻🎻

பெண் : கண்ணில் ஓரழகு

கையில் நூறழகு

உன்னால் பூமி அழகே

ஆண் : உன்னில் நானழகு

என்னில் நீயழகு

நம்மால் யாவும் அழகே

பெண் : ஹோ கண்ணதாசன்

பாடல்வரி போல

கொண்ட காதல் வாழும் நிலையாக

ஆண் : கம்பன் பாடிப்

போன தமிழ்ப் போல

இந்த நாளும் வேகம்

நலமாக

பெண் : மழை நீயாக

வெயில் நானாக

வெள்ளாமை நீ ஆஆ....

ஆண் : கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா

  🎻🎻🎻🎻🎻

பெண் : லாலா லாலா லாலா

லா லாலா லாலா லாலா

லாலா லா லாலா லாலா

 🎻🎻🎻🎻🎻

ஆண்:கொக்கிப் போடும்விழி

கொத்திப் போகும் இதழ்

நித்தம் கோலம் இடுமா

பெண் :மக்கள் யாவரையும்

அன்பில் ஆளுகிற

உன்னைப் போல வருமா

ஆண் :வெளி வேஷம் போட தெரியாமல்

எனதாசை கூட தடுமாறும்

பெண்:ஹம் ஹம்..பல கோடி பேரின் அபிமானம்

உனக்காக ஏங்கும் எதிர்காலம்

ஆண் : நீ என் நாடு

நான் உன்னோடு

மெய் தானே இது

ஆஆஆ

பெண் :கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா

ஆண் : கொஞ்சும் நேரம்

கொஞ்சும் நேரம்

எல்லை மீறக் கூடாதா

பெண்: இந்த நேரம் இன்ப நேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா ஆஆ

👫👫👫👫👫


படம் : அன்னை ஓர் ஆலயம் (1979)

பாடல் ஆசிரியர்: வாலி

இசை : இளையராஜா

பாடியவர் : T.M.சௌந்தரராஜன்

 

அம்மா..

##

அம்மா....

நீ சுமந்த பிள்ளை

சிறகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்

கொண்டாடும் தெய்வம் ..தாயே

அன்னை ஓர் ஆலயம்

அன்னை ஓர் ஆலயம்

அம்மா..

நீ சுமந்த பிள்ளை

சிறகொடிந்த கிள்ளை

♬♬♬♬♬♬♬♬♬♬♬♬

மண்ணில் என்ன தோன்றக் கூடும்

மழை இல்லாத போது

மனிதனோ மிருகமோ

தாயில்லாமல் ஏது

மண்ணில் என்ன தோன்றக் கூடும்

மழை இல்லாத போது

மனிதரோ மிருகமோ

தாயில்லாமல் ..து

அன்னை சொன்ன வார்த்தை இன்று

நினைவில் வந்தது

அன்பு என்ற சொல்லே தாயின்

வடிவில் வந்தது..

எங்கே எங்கே

அம்மா...

நீ சுமந்த பிள்ளை

சிறகொடிந்த கிள்ளை

♬♬♬♬♬♬♬♬♬♬♬♬

வாழவைத்த தெய்வம் இன்று

வானம் சென்றதேனோ

உலகிலே உன் மகன்

நீரில்லாத மீனோ

வாழவைத்த தெய்வம் இன்று

வானம் சென்றதேனோ

உலகிலே உன் மகன்

நீரில்லாத மீனோ

மீண்டும் இந்த மண்ணில் வந்து

தோன்ற வேண்டுமே..

வாழ்க வாழ்க மகனே என்று

வாழ்த்த வேண்டுமே..

எங்கே எங்கே

அம்மா...

நீ சுமந்த பிள்ளை

சிறகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்

கொண்டாடும் தெய்வம் தாயே

அன்னை ஓர் ஆலயம்

அன்னை ஓர் ஆலயம்..

👩👩👩👩👩



படம் பாசம்(1962)

பாடல்- பால் வண்ணம் பருவம் கண்டு

பாடல் ஆசிரியர் - கண்ணதாசன்

இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள்:பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

(இசை)

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ணக் கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ..வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

ஆண்: மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

 

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.


🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻


படம் -புதிய பறவை(1964)

பாடல்- பார்த்த ஞாபகம் இல்லையோ

பாடல் ஆசிரியர் -கண்ணதாசன்

இசை -எம்.எஸ்.வி

பாடியவர்-p.சுசீலா 

 

F)ஆஹா

F)ஆஹா

F)ஆஹா

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்திநேரம்

 

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்திநேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சிலகாலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

இந்த இரவைக் கேளது சொல்லும்

அந்த நிலவைக் கேளது சொல்லும்

 

இந்த இரவைக் கேளது சொல்லும்

அந்த நிலவைக் கேளது சொல்லும்

உந்தன் மனதைக் கேளது சொல்லும்

நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ


👁👁👁👁👁👁👁👁👁👁👁👁

பாடல்:முத்துக்கு முத்தாக /Muthukku Muthaga

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: கன்டாசாலா

படம்:அன்புச்சகோதரர்கள்/Anbu Sagodharargal 

ஆண்டு:(1973)

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக (2)

 

தாயாரும் படித்ததில்லை

தந்தை முகம் பார்த்ததில்லை

தாலாட்டு கேட்டதன்றி

ஓர் பாட்டும் அறிந்ததில்லை (2)

 

தானாக படித்து வந்தான்

தங்கமென வளர்ந்த தம்பி (2)

 

தள்ளாத வயதினில் நான்

வாழுகிறேன் அவனை நம்பி

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

 

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்

வேதமெனும் தம்பியுள்ளம் (2)

 

அன்னையென வந்த உள்ளம்

தெய்வமெனக் காவல் கொள்ளும் (2)

சின்னத்தம்பி கடைசித்தம்பி

செல்லமாய் வளர்ந்த பிள்ளை (2)

 

ஒன்றுப்பட்ட இதயத்திலே

ஒரு நாளும் பிரிவு இல்லை

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

 

ராஜாக்கள் மாளிகையும்

காணாத இன்பமடா

நாலுகால் மண்டபம்போல்

நாங்கள் கொண்ட சொந்தமடா (2)

 

ரோஜாவின் இதழ்களைப் போல்

தீராத வாசமடா (2)

 

நூறாண்டு வாழவைக்கும்

மாறாத பாசமடா

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

👱👱👱👱👱👱👱👱👱👱👱👱👱


படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்

Alibabavum 40 Thirudargalum(1956)

பாடல்:மாசிலா உண்மை காதலே/

masila unmaik kathale 

பாடலாசிரியர்: A.மருதகாசி

இசை: தக்ஷ்ணமூர்த்தி

பாடியவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் பானுமதி.

 

ஆண்: மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

பெண்: பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

BitMusic

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

BitMusic

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஆண் பெண் இருவரும்:

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ….

💕💕💕💕💕💕💕💕💕💕

திரைப்படம் : மரகதம்/ maragatham (1959)

இசை: S M சுப்பையா நாயுடு

பாடியவர்கள்: J P சந்திரபாபு, ஜமுனா ராணி

பாடல் ஆசிரியர்: R. பாலு

 

* OPENING MUSIC **

ஆண்: குங்குமப் பூவே..

கொஞ்சு புறாவே..

குங்குமப் பூவே....

கொஞ்சு புறாவே....

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே

** INTERLUDE **

பெண்: போக்கிரி ராஜா..

போதுமே தாஜா..

போக்கிரி ராஜா....

போதுமே தாஜா....

பொம்பள கிட்டே ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

** MUSIC **

பெண்: தந்தன தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே..

** INTERLUDE **

பெண்: தந்தன தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே..

நீ மந்திரத்தாலே மாம்பழத் தானே

பறிக்க எண்ணாதே

மந்திரத்தாலே மாம்பழத் தானே

பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா...

போதுமே போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா...

ஆண்: குங்கும குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே..

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சு புறாவே..

** INTERLUDE **

ஆண்: ஜம்பர தட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே...

** INTERLUDE **

ஆண்: ஜம்பர தட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

குங்கும குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே..

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சு புறாவே..

பெண்: சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு தெரியுமா...

** INTERLUDE **

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு தெரியுமா..

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா..

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

 

எனக்குப் புரியுமா..

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா..

போதுமே போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா..

** MUSIC **

ஆண்: செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்...

** INTERLUDE **

ஆண்: செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்...

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலிய கட்டிக்கனும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலிய கட்டிக்கனும்

குங்குமப் பூவே..

கொஞ்சு புறாவே..

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே..

**CONCLUDING MUSIC **

🍀🌸🍀🌸🍀🌸🍀🌸

திரைப்படம் : பலே பாண்டியா (1962)

பாடல்:அத்திக்காய் காய் காய் / Athikai Kaai Kaai

இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள்: TMS,P.சுசீலா, PBS,ஜமுனாராணி

பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்

 

பெண் : அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

** INTERLUDE **

ஆண் : அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

என்னுயிரும் நீ அல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே...

 

** INTERLUDE **

பெண் : ....

....

** MUSIC **

பெண் : கன்னிக் காய் ஆசைக் காய்

காதல் கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக் காய்..

** INTERLUDE **

பெண்:கன்னிக் காய் ஆசைக் காய்

காதல் கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக் காய்

ஆண் : மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

பெண் : இத்திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ..

 

** INTERLUDE **

பெண் : ஓஒஓஒ ஓஓ ...

ஆஅஆஅ ஆஆ ...

** MUSIC **

 

ஆண் : இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக் காய்..

** INTERLUDE **

ஆண் : இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக் காய்..

பெண் : உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இருவர்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

** MUSIC **

 

இருவர்: ஹா ஹா

ஹா ஹா

பெண் : ஏலக் காய் வாசனை போல்

எங்கள் உள்ளம் வாழக் காய்

சாதிக் காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக் காய்..

** INTERLUDE **

பெண் : ஏலக் காய் வாசனை போல்

எங்கள் உள்ளம் வாழக் காய்

சாதிக் காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக் காய்

ஆண் : சொன்னதெல்லாம் விளங்காயோ

தூது வழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இருவர்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

** MUSIC **

இருவர்: ஹா ஹா

ஹா ஹா

ஆண் : உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேர் சுரைக்காயோ

வெள்ளரிக் காய் பிளந்தது போல்

வெண்ணிலவே சிரித்தாயோ..

** INTERLUDE **

ஆண் : உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேர் சுரைக்காயோ

வெள்ளரிக் காய் பிளந்தது போல்

வெண்ணிலவே சிரித்தாயோ

பெண் : கோதை என்னை காயாதே

கொற்றவரங்காய் வெண்ணிலா

ஆண் : இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய் வெண்ணிலா

நால்வரும்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா..

ஓஹோஹோ.. ஹோ ஹோ

ம்ஹும் ஹும்...

 

பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப் போல்

பெண்ணல்லவோ

 

பெண் : நீ என்னைப்

போல் பெண்ணல்லவோ

 

ஆண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

 

ஆண் : என்னுயிரும்

நீ அல்லவோ அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

 

பெண் : …………………..

 

பெண் : { கன்னிக் காய்

ஆசைக் காய் காதல்

கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய் } (2)

 

ஆண் : மாதுளங்காய்

ஆனாலும் என் உள்ளங்காய்

ஆகுமோ என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

 

பெண் : இத்திக்காய்

காயாதே என்னைப்

போல் பெண்ணல்லவோ

 

பெண் : ……………………..

 

ஆண் : { இரவுக்காய்

உறவுக்காய் ஏங்கும்

இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும்

காய் நேரில் நிற்கும்

இவளைக் காய் } (2)

 

பெண் : உறவங்காய்

ஆனாலும் பருவங்காய்

ஆகுமோ என்னை நீ

காயாதே என்னுயிரும்

நீயல்லவோ

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

 

பெண் : { ஏலக்காய் வாசனை

போல் எங்கள் உள்ளம்

வாழக் காய் ஜாதிக் காய்

பெட்டகம் போல் தனிமை

இன்பம் கனியக் காய் } (2)

 

ஆண் : சொன்னதெல்லாம்

விளங்காயோ தூது வழங்காய்

வெண்ணிலா என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

 

ஆண் : { உள்ளமெல்லாம்

மிளகாயோ ஒவ்வொரு

பேர் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் கிளர்ந்தது

போல் வெண்ணிலவே

சிரித்தாயோ } (2)

 

பெண் : கோதை

என்னை காயாதே

கொற்றவரங்காய்

வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய்

வெண்ணிலா

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

🍋🥭🍐🍋🍋🥭🍐🍋

பாடல் :நான் மலரோடு தனியாக/

 nan malarodu thaniyaga

திரைப்படம்:இருவல்லவர்கள்(1966)

பாடகர் :டி எம் எஸ்,பி. சுசீலா

இசையமைப்பாளர் :வேதா

பாடலாசிரியர்:கண்ணதாசன்

 

M. நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

 

F. நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

 

M. நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

 

M. நீ வருகின்ற வழி மீது

யார் உன்னைக் கண்டார்

உன் வலைகொஞ்சும் கை மீது

பரிசென்ன தந்தார்

.நீ வருகின்ற வழி மீது

யார் உன்னைக் கண்டார்

உன் வலைகொஞ்சும் கை மீது

பரிசென்ன தந்தார்

 

உன் மலர் கூந்தல் அலைபாய

அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது

சுவை என்ன தந்தார்

உன் மலர் கூந்தல் அலைபாய

அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது

சுவை என்ன தந்தார்

F. நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

M. நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

 

F. பொன்வண்டொன்று மலரென்று

முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே

மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று

முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே

மெதுவாக மூட

 

என் கருங்கூந்தல் கலைந்தோடி

மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன்

உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி

மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன்

உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

M. நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன் 

🌹🌹🌹🌹🌹


No comments:

Post a Comment