"தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 31

"FOOD HABITS OF TAMILS" PART:31 "இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"  "Food Habits Of Medieval period Tamils continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

பன்னிரெண்டாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு கொழுப்பில் இட்டுப் பொறிக்கப்பட்ட இனிப்பு பணியாரம் பற்றி குறிப்பிடுகிறது. இனிப்பின் ஆதாரப் பொருட்களாக கரும்பு, பனை வெல்லங்கள் இருந்திருக்கின்றன. திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு,(கி.பி.1070 முதல் கி.பி.1110)  திருப்பணியாரத்துக்குத் தேங்காய், கருப்புக்கட்டிஎனக் குறிப்பிடுகிறது. கருப்புக்கட்டி [கருப்பட்டி] என்றால் கரும்பில் இருந்து எடுக்கப் பட்டது என்றும் பொருள் படும். இந்த பணியாரத்திற்கு, பாண்டிய அரசன்  வாழைப் பழம், சீரகம், உலர் இஞ்சி, மிளகு, கரும்பு போன்றவற்றை சேர்த்து ஆண்டவனுக்கு படைத்தார். அதிரசம் என்ற இன்னும் ஒரு படையலும் அறியப்படுகிறது. கிருஷ்ண தேவராயன் கல்வெட்டுச் செய்தி, அதிரசத்துக்கு என்று அதிரசப்படி எனும் அரிசி வகை இருந்ததாகவும் அத்துடன் வெண்ணெயும், சர்க்கரையும், மிளகும் வழங்கியதாகவும் கூறுகிறது. தமிழனின் உணவு எளிமையானதாகவே இருந்துள்ளது. வேகவைக்கப் பட்டது மிகுதியாகவும், எண்ணெயில் பொரிக்கப் பட்டது  அபூர்வமாகவும் இருந்துள்ளன. அந்த பண்டைய காலத்தில் மாட்டு வண்டிலில் பிரயாணம் செய்தார்கள். அது பல கிழமைகளும் எடுக்கும்.ஆகவே அவர்களுக்கு பல நாட்கள் பழுதாகாமல் இருக்கக் கூடிய உணவு தேவை பட்டது. அப்படியான உணவுகளில் இந்த அதிரசமும் ஒன்றாகும். இதற்கு பொதுவாக மூன்று முக்கிய பொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவை அரிசி, வெல்லம், ஏலக்காய் ஆகும். என்றாலும் தயாரிப்பதற்கு  இது கூட நேரத்தையும் அதே நேரம் செய்முறை சிக்கலானதாகவும் உள்ளது.

 


இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த தொலெமி அல்லது தாலமி (Ptolemy, /ˈtɒləmi/) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெ மாயெஸ் (Claudius Ptolemaeus ], தனது வரலாற்றுக் குறிப்பில் அரிசி, வர்த்தக பொருளாக இலங்கையில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரிசி முதலாம் நுற்றாண்டில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து எகிப்திற்கு இறக்குமதி செய்யப் பட்டதாக செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன. பெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது "கடல் வழிப்பயணம்" ( கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும். இந்த பெரிப்ளசு என்ற கையேட்டு நூலை எழுதியவர் ஒரு கிரேக்க மாலுமி ஆகும். இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றே அழைக்கின்றனர். மேலும் எகிப்தின் பண்டைய துறை முகமான, வெரெணிகே அல்லது பர்ணிஸ் / பெரெனீசு [Berenike or Berenice] துறைமுகத்தில் கண்டு எடுக்கப் பட்ட தொல்பொருள்களும் இதை மெய்ப்பிகின்றன.

 


இத் துறை முகம் தற்போது மெதினெத் எல் ஹரஸ் [Medinet-el Haras] என அழைக்கப் படுகிறது. 1994 தொடங்கி இங்கு டெலவேர் பல்கலைக் கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள அகழாய்வுகளில் பண்டைத் தமிழகத்துடன் இத் துறைமுகம் கொண்டுள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் பல பல சான்றுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சோழப்பேரரசின் ஆட்சி தமிழகத்தில் ஒன்பதாம் நுற்றாண்டில் இருந்து பதின் மூன்றாம் நுற்றாண்டு வரை மேலாதிக்கம் செலுத்தியது. சோழ கல்வெட்டுக்கள் அரிசி முதன்மை பயிராக வளர்க்கப்பட்டதையும் அதுவே தமிழர்களின் பிரதான உணவாக இருந்ததையும் காட்டுகிறது. இந்த சோழ காலத்தில் எழுதப் பட்ட இலக்கியமும் இதை உறுதிப் படுத்துகின்றன. உதாரணமாக  இடைக்கால அல்லது சோழர் கால ஔவையார், "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்" என்று குலோத்துங்க சோழ மன்னனை வாழ்த்துகிறார். இது - அரிசி அல்லது அதில் இருந்து பெறப்பட்ட  பொரி, அவல், மா போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவே அங்கு பிரதான உணவாக இருந்ததைக் சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் பால், நெய், தயிர் போன்றவற்றையும் முதன்மையாக உட்கொண்டார்கள்.


கிழக்கு ஆசியா [கீழ் திசைக்குரிய அல்லது கிழக்கித்திய East Asia / oriental] சமையல்களில் நீராவியில் வேக வைத்தல் முக்கிய இடத்தை வகுக்கிறது. இவர்களின் பிரதான உணவான அரிசி இதற்கு மிகவும் உகந்ததாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். சீனர்கள் மூவாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே ஆவியில் வேகவைத்து சமையல் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் சீனாவின் மாகாணங்களில் ஒன்றான யுன்னானில் [province of Yunnan] கிடைத்துள்ளன. இது கல்லாலான நீராவிப் பாத்திரம் [stone steamers] ஆகும். எட்டாம் நுற்றாண்டில் சீனர்கள் ஒரு வகை ஊசி இலை [புன்னை / cypress] மெல்லிய மரத் துண்டில் இருந்து நீராவிப் பாத்திரம் செய்தார்கள். இது இப்ப மூங்கிலால் மாற்றிடு செய்யப் பட்டுள்ளது. நீராவி சமையல், உணவின் / சேர்மானங்களின் அமைப்பு, சுவை, ஊட்டச்சத்து [போஷாக்கு] போன்றவற்றை பத்திரப் படுத்துகிறது. மண் பானையில் சமைப்பது பாரம் பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். இங்கு மண் பானைகளில் உள்ள நுண் துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பொதுவாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீராவியில் வேக வைக்கும் போது, கொதிக்கும் நீர் எந்த சந்தர்ப்பத்திலும் உணவுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி : 32 தொடரும்….

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 32


✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01 


 

"FOOD HABITS OF TAMILS" PART: 31

"Food Habits Of Medieval period Tamils continuing"

 

A 12th century inscription from the reign of Kulotunga Chola mentions the popular deep fried sweet Paniyaram. It mentions the use of coconuts and palm sugar. Interestingly, the inscription mentions it as Karuppatti – the name hasn’t changed in 1000 years. The Pandya kings seemed to have added banana, Cumin [Jeerakam], dry ginger, pepper and sugarcane to this sweet when they offered it to the god. Adhirasam is another offering mentioned, in the recipe. in ancient days people used bullock cart to travel that required several weeks. They had to keep the food for several days for travel. Adhirasam is one such kind of food. Its prepared only three ingredients rice, jaggery and Cardamom. But the preparation requires lot of time and the process is quite complicate. We can keep this food for several days.

 

The Mediterranean author Ptolemy noted in the second century A.D. that rice came from the island of Sri Lanka as an item of trade. Rice was exported from India’s western coast to Egypt as documented in the first-century A.D. Greek merchant’s text The Periplus of the Erythrean Sea and as demonstrated by archaeological finds from the Roman port site of Berenike on Egypt’s eastern coast. In the southern Tamil speaking region, the Cholas were the dominant polity from the ninth through 13th centuries A.D. Stone inscriptions also show that rice was the principal crop grown in the Chola period, and that it was “the staple food of the population”. South Indian literature written during this period highlights rice as a landscape motif, basic food, and ceremonial comestible. Medieval period Famous Poetess, Avvaiyar, while giving the formula for development, also indicate importance of paddy as "When the rice-bunds are high, the irrigation water will rise; When the water rises, the paddy will grow; When the paddy grows, the inhabitants will thrive; When the inhabitants thrive, the kingdom will flourish; When the kingdom flourishes, the king will prosper." [வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்], Meaning: If the "bund" of field is raised the water level increases, if the water level is increased the paddy will be taller, taller the paddy the citizen will grow, if the citizen grow the king grows. this once again point out that Rice as well as any food made out from crushed or pounded rice were still staple food of the people even during the Bakthi [devotional cults] period. They had also consumed milk, ghee, and curd.

 

Steaming has played a major role in Oriental cooking as their staple - rice - is best suited for this method. The Chinese have used steaming devices for more than three thousand years, as evidenced by archaeological finds of stone steamers from the province of Yunnan. By the 8th Century, the Chinese had mastered the art of making steamers from thin cypress strips, which have been replaced by bamboo today. Steam best preserves the texture, flavour and nutrition of the ingredients. Steam cooking should not be confused with pressure cooking. The differentiating factor is that boiling water never comes in contact with the food in steam cooking whereas in ordinary pressure cooking the food is immersed in water.

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 32 WILL FOLLOW

0 comments:

Post a Comment