“தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 29
"FOOD HABITS OF TAMILS" PART:29, "இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள்", "Food Habits Of Medieval period Tamils" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]
சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஏழாம் நூற்றாண்டில் இருந்து கி பி மூன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு அது முடிவுறும் இறுதி காலத்தை, பிந்தைய சங்க காலமாக அடையாளப் படுத்தப்பட்டது. கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்தும் கொண்டனர். பொதுவாக களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படை யெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். இருப்பினும் இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன. மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம், சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்று வித்தது. உதாரணமாக, நல்ல நடத்தைக் குரியவை பற்றியும், உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப் பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது, இனியவை நாற்பது, நாலடியார் போன்றவை தோன்றின. களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை, முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள். என்றாலும் இவர்களைப் பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடிய வில்லை. இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப் படுகிறது. தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டனர். எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது. இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது. இந்த பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது.
காலப் போக்கில் உணவைப் பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் தமிழகத்தில் தோன்றின. தமிழ் நாட்டிலோ அல்லது சங்க காலத்திலோ இல்லாத மரக்கறி உணவுக் கொள்கை அல்லது புலால் உண்ணாமை, சமணம், பெளத்தம் போன்றவற்றின் செல்வாக்கால் அங்கு வெளிப்பட தொடங்கின. இது தமிழர்களின் உணவு பழக்கங்களில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது. மேலும் சுவைகளை ஆறு வகையாக, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என்ற அறு சுவையாக பிரித்தனர். அத்துடன் எல்லா உணவுகளையும் இரண்டு பரந்த பிரிவுகளில், சூடு, குளிர் சாப்பாடுகளாக வகுத்தார்கள். இன்றும் தமிழர் உணவுகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் [இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர்] இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. அது மட்டு அல்ல களப்பிரர்கள் கால தமிழ் இலக்கியமான நாலடியார்:
"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட, மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச், சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம்ஒன், றுண்டாக வைக்கற்பாற் றன்று." என்ற பாடலில் அறுசுவையை குறிப்பிடுகிறது. அதாவது, அறுசுவைகளான கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு என்பவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை அன்புடன் மனைவி வழங்க, ஒரு உருண்டை (கவளம்) உணவு போதும் என்று, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியவராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத் தக்கதன்று என்கிறது.
மேலும் அங்கு கிராமப்புறங்களில் தினை முக்கிய உணவாக இருந்தன. அது அண்மைய காலம் வரை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. உண்மையில் இப்பவும் தொலை தூர அல்லது பழைமையான தமிழ் நாட்டு கிராமங்களில் திணை அவர்களின் பிரதான உணவாக இருப்பதுடன், அங்கு எப்போதாவது சில வேளையே சோறு உண்ணப்படுகிறது. அதிகமாக கொண்டாட்ட நாட்களிலேயே இந்த நெல்லுச் சோறு உண்ணப்படுகிறது. எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப் புறங்களில் இருந்தும் மறைய தொடங்கு கின்றன. முருகனுக்கு தேனும், தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள். அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன. இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது. பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது. இதை களி, கூழ் என அழைத்தார்கள். இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி : 30 தொடரும்…
👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:
"FOOD HABITS OF TAMILS" PART: 29
"Food Habits Of Medieval period Tamils"
The Sangam Age came to an end during the middle of the Third century A.D. The closing years of the Sangam Age was called the post-Sangam period. Then the Kalabhras captured the Tamil country from the Chera, Chola and Pandyan rulers and These Kalabhras had occupied the Tamil country from the middle of the Third century A.D. to the end of the Sixth century A.D. The North Indian religions, namely Buddhism and Jainism began to spread in the Tamil region. The traditional religious beliefs of the Tamil people gave way to the new religious ideas. The impulse of these works was oriented towards reforming the society. For example, morality in political and social life had been strictly insisted in the poems of InnaNarpathu, Iniyavai Narpathu and Naladiyar [இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார்]. We have very few sources to study the history of the Kalabhras. This is one of the reasons to call this period as Dark Age. By the end of the Sixth century A.D. the Pandyan ruler Kadungon had liberated the southern part of the Tamil country from the Kalabhras. By the same period, the Pallava king, Simhavishnu had captured Tondaimandalam and Cholamandalam from the Kalabhras. Thus, the Kalabhra rule in Tamil country came to an end. During the end of the Kalabhra rule, the Bakthi-cult [devotional cults] flourished in the Tamil country through which both Saivism and Vaishnavism began to flourish there.
Over the years, certain interesting concepts in food appeared. A tradition of vegetarianism, which was largely absent from ancient Tamil Nadu or among the sangam tamils began to emerge, mainly as a result of the popularity of Buddhism and Jainism. Taste was classified into six groups, and all food commodities were divided into two broad categories, hot and cold. The whole of Tamil cuisine is still largely based on this classification which also influenced indigenous medicinal practices: Even a Tamil poetic work, Naladiyar of the Kalabhra age, speaks about six tastes [அறுசுவை]. It says,"While the wife feeds the husband, with love and desire, the different types of foods prepared with six tastes; Being rich and pompous, He takes only one handful leaving the rest untouched, from the varieties of food prepared, the remaining food is wasted".
Further, Millets formed a major part of the food in rural areas, consumed until recently. In fact, in remote villages of Tamil Nadu, food items made of millets were staple food and rice was consumed occasionally. They had nelluchoru (food made of rice) once in a while during festival periods. However, Over a period of time, the eating habits drastically changed and millets started disappearing from the plates in rural areas too. The prayer offered to Lord Muruga in Tamil starts with the words "Thaenum Thinai Maavum" (I offer honey with Thinai flour ie. Foxtail millet) shows how millets were valued by our ancestors. The gruel made of Thinai was the staple food of ancient Tamils and is called "kali and koozh".It was consumed even during the Sangam era.
Thanks
[Kandiah
Thillaivinayagalingam,Athiady, Jaffna]
PART : 30
WILL FOLLOW