"விலைபோகும் நீதி"

"விலைபோகும் நீதி"

 


"விலைபோகும் நீதி முல்லைத்தீவில் புரியுது

தலையாட்ட மறுத்தவனுக்கு பயமுறுத்தல் வேறு!

கொலைக்குப் பயந்து நாட்டையே துறந்தான்

அலையாத மனமும் திரையில் மறைந்தது!"

 

"அடங்காத வெறியர்களின் ஆட்டத்தை நிறுத்த

அறிவாகத் தர்மத்தை எடுத்து உரைத்தானே!

அளவாகச் சட்டத்தை நேர்மையாகப் பாவித்தவனுக்கு

அசிங்கமான பேச்சே பரிசாகக் கிடைத்ததே!"

 

"புத்தநாடு இதுவென பெருமையாகக் கூறுபவனே

புத்தன் போதித்த கொள்கை தெரியுமா?

புகழ்மிக்க எங்கள் இலங்கை நாட்டை

புற்று நோயாய் மகாவம்சம் கெடுக்குதே!"

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁 


"சின்னப் பெண்ணுக்கும் பொம்மையே துணை!" 

 

"வன்னியில் நடந்தது பலஸ்தீனத்தில் நடக்குது

கன்னியின் கற்பு இடிபாடில் சிதையுது

மண்ணின் மைந்தர்கள் மாய்ந்து மடிகின்றனர்

விண்ணில் இருந்து குண்டு பொழிகிறது

ஆண்டவன் எங்கே மனிதன் கேட்கிறான்?"

 

"பன்னாட்டுச் செய்திகள் குட்டையைக் கிளறுது   

அன்ன நடையில் உலகத்தை ஏமாற்றுது

சொன்ன வாக்குறுதிகள் காற்றில் பறக்குது

மின்னல் வேகத்தில் அகதிமுகாமும் சிதறுது 

சின்னப் பெண்ணுக்கும் பொம்மையே துணை!"  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment