திருக்குறள் தொடர்கிறது…
55.
செங்கோன்மை
👉குறள் 541:
ஓர்ந்துகண்ணோடா திறைபுரிந்
தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
மு.வ உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து,
கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து
எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு
ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
கலைஞர் உரை:
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப்
பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
English Explanation:
To examine into (the crimes which
may be committed), to show no favour (to any one), to desire to act with
impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely
resolved on.
👉குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம்
மன்னவன்கோனோக்கி வாழுங் குடி.
மு.வ உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை
நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே
வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
கலைஞர் உரை:
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை
தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
English Explanation:
When there is rain, the living
creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
👉குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும்
ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மு.வ உரை:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும்
அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும்,
அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
கலைஞர் உரை:
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும்
அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
English Explanation:
The sceptre of the king is the firm
support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
👉குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில
மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
மு.வ உரை:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல்
செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான
ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
கலைஞர் உரை:
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும்
நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.
English Explanation:
The world will constantly embrace
the feet of the great king who rules over his subjects with love.
👉குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ
னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
மு.வ உரை:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய
நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக
ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால்
அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
English Explanation:
Rain and plentiful crops will ever
dwell together in the country of the king who sways his sceptre with justice.
👉குறள் 546:
வேலன்று வென்றி தருவது
மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல்
அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம்
அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை
வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
English Explanation:
It is not the javelin that gives
victory, but the king's sceptre, if it do no injustice.
👉குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம்
அவனை
முறைகாக்கும் முட்டாச்
செயின்.
மு.வ உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்,
நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ
அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த
அரசை அந்த நீதியே காப்பாற்றும்.
English Explanation:
It is not the javelin that gives
victory, but the king's sceptre, if it do no injustice.
👉குறள் 548:
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா
மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.
மு.வ உரை:
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி
முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய்,
நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும்
பலியும் எய்தித் தானே அழிவான்.
கலைஞர் உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும்
நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
English Explanation:
It is not the javelin that gives
victory, but the king's sceptre, if it do no injustice.
👉குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக்
குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
மு.வ உரை:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும்
வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய
தொழில் பழி அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும்
காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது.
அது அவர் தொழில்.
கலைஞர் உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும்,
குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும்
அரசின் கடமையாகும்.
English Explanation:
In guarding his subjects (against
injury from others), and in preserving them himself; to punish crime.
👉குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.
மு.வ உரை:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன்
ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத்
தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
கலைஞர் உரை:
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர்
அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
English Explanation:
For a king to punish criminals with
death, is like pulling up the weeds in the green corn.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
Theebam.com: திருக்குறள்...-/56/-கொடுங்கோன்மை:
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment