"தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 26

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART : 26 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

 


தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310].

 


பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345]. கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும்.அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360].

 


இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475].

 


500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம். "அவையா அரிசி அம்களித் துழவை, மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி, பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும், பூம்புற நல் அடை அளைஇ தேம்பட, எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி, வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" பெரும்பாணாற்றுப்படை (275-281) அதாவது, குற்றாத தவிடெடு படாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது.

 


"துணைப்புணர்ந்த மடமங்கையர், பட்டுநீக்கித் துகிலுடுத்தும், மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும், மைந்தர்கண்ணி மகளிர் சூடவும், மகளிர்கோதை மைந்தர் மலையவும்"  பட்டிணப்பாலை [106-110] அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.


கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட, 248 அடிகளைக் கொண்ட, பொருநராற்றுப்படையில், அடிகள்:102 – 108, எப்படி பண்டைய தமிழன் இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டினான் என்பதை [சங்க கால கேபாப்?] சுட்டிக் காட்டுவதுடன் பலவகையான மாவுப் பலகாரங்களையும் மேலும் குறிப்பிடுகிறது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி : 27 தொடரும்…

 👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-

Theebam.com: ''தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 27

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01 

 

 

"FOOD HABITS OF TAMILS" PART: 26

"Food Habits of Ancient Sangam Tamils” continuing"

 


When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்].

At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ].

And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்].

Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy. "when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281]. Also we find from Sangam literature that "Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110]

The Sangam period poem, ”Porunaratruppadai, Which were written by the poet Mutathaamakkanniyaar in praise of the Chola king Karikala Chola, read like travelogues, in which poets who were returning with gifts received from a king, encourage other poets to do the same by describing in glowing terms the king and his country. Here, lines 102 – 108, Indicate how ancient Tamils roasted meat on iron rods.- may be a Sangam period kabab? - and many, different shapes of pastries as given below:

 Thanks

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]


No comments:

Post a Comment