"தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 25

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART : 25 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]

 


பெரும்பாணாற்றுப்படையில் கானவர் விருந்து பற்றி கூறுகையில், வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப் பகுதி வரும். அங்கே, செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு, முள்ளம் பன்றிக் கறிக் குழம்பு, உடும்புக் கறி வறுவல், இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள் என்கிறார். [கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி, குமலி தந்த மனவுச்சூல் உடும்பின், வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர், 129-133]. குறுஞ்சி பகுதியில், திருடர்கள், தன் சொற் கேளாத பகை மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, விடியற்காலத்தே அவர்கள் கால்நடைகளைப் பற்றிக் கொணர்ந்து அவற்றைக் கள்ளுக்களில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதனுடன் கவர்ந்து கொண்டு வந்த ஒரு வலிமையான காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி தின்றதை வர்ணிக்கிறது வரிகள் 140-143. [கேளா மன்னர் கடிபுலம் புக்கு, நாள்ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்அடு கள்இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,]

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பொதுவாக பண்டமாற்று செய்து கொண்டார்கள். கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம் தான் இந்த ஆரம்பகால வணிக வழக்கமாகும். அங்கு நெல்லே பிரதான பரிமாற்ற ஊடகமாக இருந்தது, இதை தொடர்ந்து உப்பு இரண்டாவது இடத்தை வகுத்தது. உதாரணமாக தேன், கிழங்குவகைகள் பொதுவாக மீன் கல்லீரல் எண்ணெய் மற்றும் கள்ளுக்கும் [fish liver oil and toddy] பரிமாறப்பட்டன. அதேவேளை, கரும்பு, அவல் போன்றவை மான் இறைச்சி, கள்ளு போன்றவற்றிற்கு பரிமாறப் பட்டன. சங்க பாடல்கள், உதாரணமாக புறநானூறு பாடல் ஒன்று, பாண்டிய நாட்டில், நெல்லை பருப்பு வகைக்கும் மீனுக்கும் பரிமாறப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அகநானுறு 140, "காதல் மட மகள், சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி, நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச், சேரி விலைமாறு கூறலின்" என்ற அடிகள் - உப்பளத்தில் உழாமல் விளையும் உப்புக்கு ஒரு விலையிட்டு, வெண்ணிறக் கல் உப்பு நெல்லுக்கு ஒத்த அளவினதே எனச் சேரியின்கண் பண்ட மாற்றாக விலை கூறி, உப்பு வணிகரின் இளைய மகள் உப்பை விற்றாள் என்று கூறுகிறது.

 

அதி காலையில், பறவைகள் எழும்போதே எழுந்து, புலிபோலும் முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை இழுத்து ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் பண்ட மாற்று செய்து தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் முல்லை நிலத்தின் ஊடாக போகையில் காண்கிறார். [புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ், உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து, புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ, நாள் மோர் மாறும், 155-160 ]. இறுதியாக அவ்விடையர் குடியின் விருந்தோம்பற் சிறப்பை விளக்குகையில், அவர்களின் குடியிருப்பை நீ சேரும் போது, நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து தருவார்கள் என்கிறார். [குடி வயிற் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர், 165-167]. நீ மேலும் நடந்து போனால், மருதநிலப் பகுதியை அடைவாய். பசியையும் வறுமையையும் அறியாத - செல்வம் நிறைந்த - இந்த ஊரிலே தங்கினால், சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்மையான நெற்சோறும் அதனுடன் வீட்டிலே வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலும் கிடைக்கும் என அறிவுறுத்துகிறார். [தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை, மல்லல் பேர்ஊர் மடியின் மடியா, வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி, மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்,253--256 ].

 

பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் கூட புலனாகின்றன. நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப் சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், 260-262]

 

மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர், தாமே குற்றாத அரிசியில், பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர், நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல, அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார். [வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர், 279-281].

 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 26 தொடரும்

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 26:

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01 

 

"FOOD HABITS OF TAMILS" PART: 25

"Food Habits of Ancient Sangam Tamils continuing"

 


Perumpanattuppadai further says that  At the fort of the forest dwellers in many homes they will serve red rice grown in uplands that look like red berries of eenthu palms along with poriyals (stir fried) made of the flesh of iguana [கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், களர் வளர் ஈந்தின் காழ் கண்ட ன்ன, சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி, குமலி தந்த மனவுச்சூல் உடும்பின், வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்]. In the kurinchi region the thieves who steal cattle sell them to buy sweet rice liquor and enjoy it along with meat of sturdy goats [கேளா மன்னர் கடிபுலம் புக்கு, நாள்ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்அடு கள்இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி].

 

During the sangam period, Inland trading was conducted primarily through barter in busy market places. Paddy was the most commonly accepted medium of exchange, followed by purified salt. Honey and roots [edible yams] were exchanged for fish liver oil and toddy [arrack], while sugarcane and rice flakes were traded for venison and toddy. Poems in Purananuru describe the prosperous house in Pandya land well stocked with paddy that the housewife had exchanged for grams and fish. For example, In Akananuru 140, lines, We find that an innocent daughter of a salt merchant, walks through the settlement with salt, swaying her hands, jingling her round, bright bangles and shouting, “equal measure of white grainy salt for rice paddy!” [காதல் மட மகள், சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி, நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச், சேரி விலைமாறு கூறலின்]

 

In the region where cattle herders lived, small goats were tied to posts in front of their huts. The women churned yogurt to make butter and carried it in pots to the market to sell [புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ், உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து, புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ, நாள் மோர் மாறும்].They fed their families with the money earned from selling buttermilk. The minstrel advices the panars that if they ask for food, these women will feed them fresh millet cooked in milk along with white avarai beans [குடி வயிற் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்]. If they walk further they will see tall cattle sheds and grain granaries in the front yard that resembles elephants. If the bards stay here where hunger is unknown, they will get white rice along with well fried flesh of domestic fowl [தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை, மல்லல் பேர்ஊர் மடியின் மடியா, வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி, மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்].

 

Though the people of New Guinea were probably the first to domesticate sugarcane, sometime around 8,000 BC. the extraction and purifying technology techniques were developed by Indians. Originally, people chewed sugarcane raw to extract its sweetness, but later they discovered how to crystallize sugar, probably carried out through the simple process of crushing cut-pieces of cane by a heavy weight and boiling the juice extracted and stirring until solids formed. These solids being of uneven shapes and sizes were called jaggery [Sarkara / chakkarai]. Even Perumpanattuppadai describes one of such sugar cane mills found during the Sangam period in Tamil Nadu, in lines 260-262, as "they will also get sugarcane juice, as much as they desire from the noisy sugar cane mills where cane juice was boiled to make jaggery" [எந்திரம் சிலை க்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்].

 

In the neithal region where fishermen live, they will see short roofed huts covered with thatched tarpai grass. Fish baskets lie in front of the huts and when the bards stay there, fisherwomen will serve them a drink made from a mash of un-pounded boiled rice mixed with fine powdered sprouts of rice, cooled in large wide mouthed pots for two days to sweeten it along with fried fish [வல்வாய்ச் சாடியின் வழை ச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்].

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 26 WILL FOLLOW

0 comments:

Post a Comment