"விழித்திடு தமிழா!"
சந்திரயான் மூன்று மதியில் உலாவுது
சந்திர கிரகணத்துக்கு பூசை நடக்குது!
சந்ததி சந்ததியாக வந்த பழக்கமாம்
ஏந்தி கையில் தீபம் காட்டினம்!!"
"நிலாவின் தென்துருவத்தை படம் பிடிக்குது
நிதானத்துடன் தரையை அலசி ஆராயுது!
நித்திரை கொண்டது காணும் தமிழா
நினைவிலும் மறந்திடு இராகு கேதுவை!!"
"சந்திரயான் திங்களில் கால் வைக்குது
தந்திரம் மந்திரம் அங்கு இல்லை!
விந்தை படைத்தான் தெளிவு கொடுத்தான்
முந்தைய கருத்துக்களை உடைத்து எறிந்தான்!!"
"சந்திர கிரகணத்துக்கு சோதிடம் தேடினம்
சிந்தனை செய்யாது விளக்கம் கொடுக்கினம்
குந்தி இருந்து கண்மூடியது காணும்
சொந்தக் காலில் விழித்தெழு தமிழா!!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment