"FOOD HABITS OF TAMILS" PART-20 "பண்டைய
சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" "Food Habits of Ancient Sangam Tamils continuing"
[ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and
Tamil]
குறிஞ்சி மற்றும்
முல்லை
நிலப்பரப்புகளில்
நேரடியான
நெருப்புச்
சமையலும்,
பாளை
மற்றும்
நெய்தல்
நிலப்பரப்புகளில்
பொரித்தல்
மற்றும்
வெயிலில்
உலர்த்துதல்
ஆகியவை
பொதுவானவை
என்பதை
சங்க
இலக்கியங்களிலிருந்து
நாம்
புரிந்துகொள்கிறோம்.
உதாரணமாக
நெய்தல்
நில
மக்கள்
வறுத்த
மீன்கள்
உண்ணுவதையும்
மீனை
பிற்பாடு
உண்ணுவதற்கு
அதைக்
வெயிலில்
காயவைத்து
'கருவாடு'
ஆக்கியதையும்
அறிகிறோம்.
அதேபோல
இறைச்சியை
எண்ணெயில்
பொரிக்கும்
பழக்கமும்
அந்த
ஆரம்ப
காலத்திலேயே,
அதாவது
சங்க
காலத்திலேயே
இருந்துள்ளது.
கொதிக்கும்
எண்ணெயில்
இறைச்சி
பொரிக்கும்
போது,
அங்கு
எழும்
ஓசை
நீர்
நிறைந்த
பொய்கையில்
மழைத்துளி
விழுவது
போல்
இருந்தது
எனப்
புறநானூறு,
386
"நெடு
நீர
நிறை
கயத்துப்,
படு
மாரித்
துளி
போல,
நெய்
துள்ளிய
வறை
முகக்கவும்"
என
கூறுகிறது.
மேலும்
இறைச்சியை
இரும்புக்
கழியில்
சுட்டுத்
தின்னும்
வழக்கமும்
அங்கு
இருந்தது
என்பதை
அதே
பாடலில்
"சூடு
கிழித்து
வாடு
ஊன்
மிசையவு"
என்ற
வரி
மூலமும்,
மேலும்
பொருநராற்றுப்படை 102-105 ,
அகநானுறு
169. மூலமும்
அறிகிறோம்.
எப்படியாயினும்,
அங்கு
அரிசியே
[சோறு]
அவர்களின்
பிரதான
உணவாக
இருந்துள்ளது.
இன்று
'சாதம்’
என
தமிழ்
நாட்டில்
பொதுவாக
வழங்கப்படும்
அரிசிச்
சோறு,
பொது
வழக்கில்
சோறு
என்றே
வழங்கப்பட்டிருக்கிறது.
"சோறு
வாக்கிய
கொழுங்
கஞ்சி,
யாறு
போலப்
பரந்து
ஒழுகி,"
என
வருணிக்கிறது
பட்டினப்
பாலை,
வரி
44-45. இலங்கையில்
இன்னும்
'சோறு'
என்றே
அழைக்கப்
படுவதையும்
கவனிக்க.
அத்துடன்
ஆட்டுக்கடா,
மான்,
கோழி,
உடும்பு,
பன்றி
போன்ற
இறைச்சியையும்
மற்றும்,
மீன்,
நண்டு,
போன்ற
கடல்
உணவையும்,
நெய்,
மற்றும்
பல
வாசனைத்
திரவியங்களுடன்
சேர்த்து
சமைக்கப்பட்டன.
மாம்பழங்கள்,
பலாப்பழம்,
கரும்பு,
தேன்,
போன்றவை
அவர்களின்
உணவிற்கு
தித்திப்பை
கொடுத்தன.
மேலும்
அவர்களின்
நாளாந்த
உணவாக,
கிழங்கு
வகைகள்,
மூங்கில்
குழல்களில்
(குழாய்களில்)
பதப்படுத்தப்பட்ட
எருமைத்
தயிர்,
தேன்கூடு
போன்ற
இனிப்பு
கேக்குகள்,
தேங்காய்,
சர்க்கரை
முதலியன
உள்ளீடாகவுள்ள
மாப்பண்ட
வேவல்,
ஊறுகாய்,
போன்றவை
இருந்தன.
மாங்காயில்
நல்லமிளகு
கலந்து
கறிவேப்பிலை
தாளித்து
ஊறுகாய்
ஆக்கும்
வழக்கம்
பற்றி
பெரும்
பாணாற்றுப்படை,
வரிகள்,
309-10,
"கஞ்சக
நறுமுறி
அளைஇ
பைந்துணர்,
நெடுமரக்
கொக்கின்
நறுவடி
விதிர்த்த"
என
கூறும்.
கள்ளு
அங்கு
தாராளமாக
கிடைத்தன.
அதை
எல்லோரும்
பொதுவாக
குடித்தார்கள்.
“துஞ்சினார்
செத்தாரின்
வேறல்லர்
எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார்
கள்ளுண்
பவர்.”
(குறள்
926) என்று
கூறுகிறார்
வள்ளுவர்.
அதாவது,
உறங்கினவர்
இறந்தவரை
விட
வேறுபட்டவர்
அல்லர்,
அவ்வாறே
கள்ளுண்பவரும்
அறிவு
மயங்குதலால்
நஞ்சு
உண்பவரே
ஆவர்
என்கிறார்.
என்றாலும்
நாம்
சங்க
இலக்கியத்தை
பார்க்கும்
போது,
அங்கு
மது
பானம்
பண்டைய
தமிழர்
வாழ்வில்,
ஆண்
பெண்
இரு
பாலாரிடமும்,
ஒரு
முக்கிய
பங்கு
வகுத்ததை
காண
முடிகிறது.
துணை
உணவாக
மது
புலவர்களுக்கு
வழங்கி
அரசனும்
சேர்ந்து
உண்டு
மகிழ்ந்ததை,
புகழ்பெற்ற
சங்க
புலவர்
ஒளவையார்,
தனது
புறநானுறு
235 இல்,
"சிறியகட்
பெறினே,
எமக்கீயும்
மன்னே; பெரியகட் பெறினே
யாம்பாடத்,
தான்மகிழ்ந்து
உண்ணும்
மன்னே;"
என்று
எடுத்து
உரைக்கிறார்.
அதாவது,
சிறிதளவு
கள்ளைப்
பெற்றால்
அதியமான
நெடுமான்
அஞ்சி
அதை
எமக்குத்
தருவான்;
பெருமளவு
கள்ளைப்
பெற்றால்
எமக்கு
அளித்து
நாம்
பாட
அதைக்
கேட்டு
மகிழ்ந்து
அவனும்
உண்பான்
என்கிறார்
ஒளவையார்.
மேலும்
அகநானுறு
336:
"தெண்
கள்
தேறல்
மாந்தி
மகளிர்,
நுண்
செயல்
அம்
குடம்
இரீஇப்
பண்பின்,
மகிழ்நன்
பரத்தைமை
பாடி
அவிழ்
இணர்க்,
காஞ்சி
நீழல்
குரவை
அயரும்"
என
கூறுவதையும்
காண்க,
அதாவது,தெளிந்த
கள்ளினைக்
குடித்து,
பெண்கள்,
நுண்ணிய
தொழில்
நலம்
வாய்ந்த
அழகிய
குடத்தினை
வைத்து
விட்டு,
தம்
கணவரது
நற்பண்
பில்லாத
பரத்தைமைகளைப்
பாடி,
விரிந்த
பூங்கொத்துக்களை
உடைய
காஞ்சி
மரத்தின்(Trewia
nudiflora) நீழலில்
குரவை
[கைகோத்து
ஆடப்படும்]
ஆடுதலைச்
செய்யும்
மகளிர்
என்கிறது.
தமிழர் நிலத்
திணைகள்
என்பவை
பண்டைத்
தமிழர்
தமது
இயற்கைச்
சூழலுக்கு
ஏற்ப
வாழ்ந்த
நிலங்களாகும்.
இவையை
சங்க
பாடல்
முல்லை,
குறிஞ்சி,
மருதம்,
பாலை, நெய்தல் என
ஐந்திணையாக
பிரிக்கிறது.
இவ்வாறு
இயற்கையாக
அமைந்த
வெவ்வேறு
சூழ்நிலைகளில்
வசித்த
அக்காலத்துத்
தமிழ்
மக்களுடைய
வாழ்க்கையும்
வெவ்வேறு
வகையாக
இருந்தன.
அதாவது,
அவர்களுடைய
தொழிலும்
உணவும்
உடையும்
பண்பாடும்
திணைக்கு
திணை
வெவ்வேறாக
இருந்தன.
பண்ட
மாற்றமும்,
பயண
வசதியும்
ஏற்பட்ட
பின்னர்
தான்
அனைவரும்
அனைத்து
உணவு
வகைகளையும்
சாப்பிடும்
வாய்ப்பு
ஏற்பட்டது.
அதுவரை
அந்த
அந்த
மண்ணின்
மைந்தர்க்கு
அந்த
மண்ணில்
கிடைக்கும்
உயிர்களே
உணவு.
கடலின்
அருகே
வாழ்பவனுக்கு
மீன்தான்
பிரதான
உணவு.
அப்படியே
மற்றவையும்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி,
யாழ்ப்பாணம்]
பகுதி
: 21 தொடரும்….
👉அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க... அழுத்துக
"FOOD
HABITS OF TAMILS" PART: 20
"Food
Habits of Ancient Sangam Tamils continuing"
We understand from
sangam literature that direct fire cooking was prevalent in the Kurinji and
Mullai landscapes while, frying and sun-drying were common in the Palai and
Neithal landscapes. For example Neithal land people had the habit of eating
fried fish and drying it as 'karuvadu', which could be used later. Similarly
they fried meat too. In Purananuru 386,The poet narrates that,
"He gave us to
eat, fried foods with splattering ghee drops, like drops of rain showering down
on a pond brimming with water, and meat roasted on skewers. In white bowls with
meat, he poured cow’s milk up to the top and it overflowed. Other than the sweat from eating hot food, we
knew nothing of the sweat of work."
and particularly
lines such as: "He gave us to eat, fried meat dripping with ghee as when
drops of rain shower down on a pond brimming with water," & "and
meat roasted on skewers.", clearly indicate that in those early days,
Tamils know cook (food) in hot fat or oil, typically in a shallow pan. as well
as fastening meat on a long pointed piece of metal or wood and roasting over an
open fire. All of these again confirmed by Porunaratruppadai, lines,102-105
"knowing the
time to eat, he urged us to eat cooked, thick thigh meat of sheep that were fed
arukam grass twisted to ropes, and fatty, big pieces of meat roasted on iron
rods."
and Akananuru 169,
lines,
"loud bandits
take the leftover flesh pieces, threading them on iron rods, of a large bull
elephant killed and abandoned by a tiger after it ate to its full, and many
salt merchants who sell salt grown with water from the roaring ocean, roast the
leftover flesh in small fires started with kindling wood, and eat it with rice
cooked with sweet water from springs."
Rice was the staple
and they ate it with the meats of rams, deer, fowl, iguana, fish, crabs and
pigs cooked with ghee and spices. Mangoes, jackfruit, sugarcane and honey
provided the sweet component to their meals. Though rice is now called
"chaatam" [cooked rice-mainly in south India], During the Sangam
period and in general, It is called as "choru" [boiled rice]. Note that it is still called Soru in Sri Lanka.
Pattinappalai, lines 44-45. said that:
"Thick water,
drained from choru [cooked or boilled rice] poured on streets, runs like
rivers, creating slush and mud".
Their foods also
included edible roots, buffalo curd preserved in bamboo pipes, Sweet cakes
resembling honey combs, pasties made of coconut and sugar and pickled fruits.
Also Perumpanatruppadai, lines, 309-10, speaks about Mango pickles as:
"You will also
receive fragrant vadu mango pickles from
tender green mangoes from tall trees."
Toddy was in
abundant supply and was consumed by all classes of people.
“Slumbers are no
different from the dead; nor alcoholics
from consumers of poison” (Kural 926) said Thiruvalluvar, But when we look at
Sangam poems There are scores of references to indicate that alcoholic
beverages played an important part in the daily lives of ancient Tamils, both
men and women. The renowned poetess Avvaiyar
of the Sangam period has sung toddy as a supplement to meals in the
Purananuru -235 as:
"When he had
only a little toddy, he would give it to us, but now no longer; when he had
ample toddy he would give it to us and then happily drink what was left to him
as we sang.
But now no
longer" Also a poem from Akananuru (336) mentions young women consuming
toddy and dancing near a village tank beneath the shade of a kanchi tree as:
"...women come to fetch water with their pretty pots,
who drink clear liquor talking about
their men, who keep the company of concubines, as they perform kuravai dances
under a kanji tree (Trewia nudiflora)....".
Tamil Lands are
classified into five geographical areas, where ancient Tamils lived according
to their natural environment and these were namely the mountains (kurinji), the
forests (mullai), agricultural lands (marudham), the coastal areas (neidhal),
and the desert (palai). Thus the lives of the Tamil people of that time who
lived in different natural conditions were also of different types. That is,
their profession, food, dress and culture were different from land to land. It
was only after the exchange of commodities and the convenience of travel that
everyone had the opportunity to eat all types of food. Until then, the food of
that soil is, what come from there. Therefore, food related to each area has
some variations depends on the life style of the particular people & food
available there. For example, Fish is the main food for those who live near the
sea. Ditto others.
Thanks
[Kandiah
Thillaivinayagalingam,Athiady, Jaffna]
PART
: 21 WILL FOLLOW
No comments:
Post a Comment