"தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 19

"FOOD HABITS OF TAMILS" PART-19 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits of Ancient Sangam Tamils" [தமிழிலும்ஆங்கிலத்திலும்/Tamil and In English ]

 


சங்க கால உணவுகள் பற்றி சிந்திக்கும் போது, ​​தமிழர்கள் அன்று உட்கொண்ட  உணவு வகைகள் பற்றி சங்க இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே ஒருவரின் மனதில் எழும். அவ்வகையில், கிழங்குகள், அரிசி மற்றும் விலங்கு உணவுகள் அடிப்படையில் தமிழர்களின் தொன்மையான உணவாகும் என்பதை அங்கு அறிய முடிகிறது. ‘சோறு’ என்றால் சமைத்த அரிசி. சமைத்த அரிசி, காஞ்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள தமிழர்களின் சாதாரண உணவாக தென்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் எழுதிய ‘பெரும்பாணாற்றுப்படை’ என்ற சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி நகரின் அகலமான சாலை ஓரங்களில் மலைகள் போல யானைகளுக்கு உணவளிக்க சோறு சேகரித்து வைத்திருந்ததையும், அங்கு சில சமயங்களில் குரங்குகள் தலையிட்டு சோறை எடுத்துச் சென்றன என்றும் கவிஞர் கண்ணனார் தனது பாடலில் விவரிக்கிறார்.


காழோர் இகழ் பதம் நோக்கி கீழ, நெடும் கை யானை நெய் மிதி கவளம், கடும் சூல் மந்தி கவரும் காவில் . . . .[393 - 395] மற்றொரு புகழ்பெற்ற சங்க காலப் புலவரான மாங்குடி மருதனார், தனது 'மதுரைக்காஞ்சி'யில் வடநாட்டு மன்னர்களுடன் போர் புரிந்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் தமிழர்களின் நாகரீகமான வாழ்க்கை முறைகளையும் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். தமிழர்கள் அரிசி, பலாப்பழம் போன்ற பழங்கள் மற்றும் பல்வேறு வகையான மாம்பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுக்குப் பிறகு, வெற்றிலை, பாக்கு போன்றவை தமிழர்களின் உணவுப் பழக்கம் என்று கூறுகிறார்.

 


"தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய், நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்," [400 = 401] [உடலுக்கு அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரையுடைய பசிய பாக்குடன் நீண்ட கொடியில் வளர்ந்த வெற்றிலை உடையவர்களும்,]

         


   

"சேறும் நாற்றமும் பலவின் சுளையும், வேறு படக் கவினிய தேம் மாங் கனியும், பல் வேறு உருவின் காயும், பழனும், கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி, மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும், அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும், புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும், கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு, பிறவும், இன் சோறு தருநர் பல் வயின் நுகர" [527 - 535] [சாற்றாலும் மணத்தாலும் வேறுபட அழகு கொண்ட பலாவின் சுளையும் இனிய மாவின் பழங்களையும், பல்வேறு வடிவில் உள்ள காய்களும், பழங்களும், முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகளும், அமுதை வார்த்தாற்போல் உள்ள இனிய சாற்றையுடைய கற்கண்டுத் துண்டுகளையும், பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும், கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனும் பிற உணவுகளுடனும், இனிய சோற்றினை இடுபவர்கள் கொடுத்ததைப் பெற்றவர்கள் பல இடங்களிலும் உண்ண,] 

 


ஆனால், இன்று நாம் பெருபாலும் உண்ணும் வெள்ளை அரிசியானது சாதாரண உணவாக அன்று இருக்கவில்லை. இது அரிதாக  கொண்டாட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. சாதாரண உணவாக, வரகு, சாமை [Little Millet], தினை, கம்பு அரிசிகள் போன்றவை சாதாரண அரிசிக்கு பதிலாக அன்று பாவனையில் இருந்தது.  நிறைய பருப்பு வகைகளும் மேலும் பச்சை மிளகாயை விட மிளகு அன்று கூடுதலாக விரும்பப் பட்டது. உணவில் நிறைய மருத்துவ மூலிகைகள் பயன்படுத்தப் பட்டன. தமிழர்களுக்கு உணவே மருந்தாக இருந்தது. தென்னிந்தியாவின் முற்கால குடிமக்களான திராவிடர்கள் எந்த வகையிலும் சைவ உணவு மட்டும் உண்பவர்கள் அல்ல. உதாரணமாக,   2000 ஆண்டுகளுக்கும் மேலான சங்கக் கவிதை, அகநானூறு 107, வரிகள், 5- 10 & சிறுபாணாற்றுப்படை - 195 சங்க காலத்தில் தமிழர்கள் தடையின்றி இறைச்சி உண்டனர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

 


"இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு, ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட, வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு, புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்" என அகநானூறு 107, வரிகள், 5-10 கூறுகிறது. அதாவது ஆண் மானினை பெரும் புலி ஒன்று கொன்று தின்றது. எஞ்சிய இறைச்சி பாறையில் காய்ந்து கிடைகின்றது. அவ்வழியே சென்ற மக்கள் அந்த இறைச்சி துண்டை கண்டு மகிழ்ந்தனர். அந்த காய்ந்த ஊனையும் முங்கில் நெல்லின் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி, அதை தேக்கின் இலையில் வைத்து உண்டனர் என்கிறது இந்த சங்கப் பாடல். அதேபோல, சிறுபாணாற்றுப்படை 189-195 ம்,

 


"வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின், உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத், தொடிக் கை மகடூஉ மகமுறை தடுப்ப, இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்;" (189-195) திண்ணிய கழுத்தினையுடைய ஊக்கம் மிகுந்த வலிய எருதுகளை வைத்திருக்கும் உழவரின் தங்கையான, பெண் யானையின் துதிக்கையினை ஒத்தப் பின்னல் தொங்குகின்ற சிறிய முதுகினையும், வளையணிந்த கைகளையுமுடைய பெண், தன் பிள்ளைகளைத் துணையாகக் கொண்டு உம்மைத் தடுத்து இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக் கட்டியாகத் தர, நீவீர் உண்பீர் என்கிறது.

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 20 தொடரும்

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 20:

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01 

 

"FOOD HABITS OF TAMILS" PART: 19

"Food Habits of Ancient Sangam Tamils"

 


When anyone think about the food of Sangam period, the question arises in mind today is whether Sangam literature mentioned in details about the cuisine that the Tamil people had?  Roots, Rice and Animal food are basically the Tamil’s ancient food as we are getting proof from Sangam literature. ‘soru’ means cooked rice. The rice in cooked form is normal food of Tamils from Kanchi to Kanyakumari tamils. This was mentioned in ‘Perumpaanaatruppadai’ a sangam literature written by Kannanar. Not only ‘soru’ is common food for tamils they even kept and stored like hills at the side of Kaanchi city’s broad roads for the purpose of feeding of elephants but some times the monkeys were intervening and taking away the food, says Poet Kannanaar as he was witnessing the scene.

[The town is surrounded by protective forests.]

In a grove, a monkey in her first pregnancy, eyes the elephant keeper when he is careless, and slyly steals a ball of food kept down, crushed with the feet and made with rice and ghee,[line, 393 - 395]

Another famous Mangudi Marudhanar, a Sangam period Poet who wrote ‘ maduraikkanji’ which has been included in ‘Sangam Poems’ narrated the life styles of Tamils and their eating habits during the period of King Nedunchezhian who waged war with the kings belong to northern parts (The king was called as Ariyap padai kadantha Nedunchezhian in Tamil means the king who won over Arya’s big army) Tamils were familiar with rice, fruits like ‘Jack fruit’ and various type of Mango varieties, Vegetables and after food ‘paan’ i.e., Betel leaves and nuts are common as food habit for tamils. The said Tamil phrase from maduraikkanji’ is given below with english translation.

"Some sold betel leaves from long vines along with areca nuts with sweet juice and pulp inside that" [400 - 401]

"Food is served to many, with sweet rice, segments of jackfruits with juice and fragrance, beautiful, sweet mangoes of various kinds, vegetables and fruits in many different shapes that grow on beautiful plants, with delicate sprouts from properly grown branches, that have opened into leaves that are nurtured by the rains, sugar cubes that are like nectar, rice cooked with meat that is praised by many, tubers that go down into the earth and others." [527 - 535] 

However, the rice we eat today, the white one was not the standard edible crop. It was rare and used only for celebrations and religious occasions. The normal food was made with varagu, samai, thinai, kambu in place of rice today.  Also the ate lot of pulses & Pepper was preferred over chilli.  A lot of medicinal herbs used in food too. For Tamils medicine was not something different or a alien substance. The food itself was medicine and believe me it was tasty too. it is also understand that the early inhabitants of the south India - Dravidians - were by no means vegetarians. Over 2000 years old Sangam poem, Akananuru 107, lines, 5-10 & Sirupanatrupadai 189-195, clearly mentioned that, Tamils during the Sangam period had ate meat without any restrictions as:

"where a big tiger killed a stag, ate to its full, and left the flesh to dry on a wide granite boulder, making those who go on the path happy, seeds of flourishing bamboo are cooked with curds from the villages of cow herders, along with melted fatty meat and white rice, and are eaten on wide leaves of teak trees"  [Akananuru 107]

"The younger sister of a farmer who owns mighty bulls with strong necks and victorious walk, a woman with braided hair on her small back resembling a female elephant’s trunk and bangles on her hand, will serve white rice balls, from rice pounded with an iron pestle whose ends have been blunted, served with split-legged crabs, with the help of her children, blocking you from leaving." (Sirupanatrupadai - 195). A poem by: KariKannanar, KaveryPumPattinam. The text is belongs to second century B.C. or earlier.

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 20 WILL FOLLOW

 😋

0 comments:

Post a Comment