விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம் 


😎கண்நோய்களைத்  தடுக்க…


இங்கிலாந்தைச் சேர்ந்த நார்த்தும்ரியா பல்கலை, கண்களில் ஏற்படும் ரத்த அழுத்த மாறுபாடுகளைக் கண்டறிந்து மருத்துவர்களுக்குத் தகவல் அனுப்பும் நவீன கண் கான்டாக்ட் லென்ஸ்களை வடிவமைத்துள்ளது. இதன் வாயிலாக,  நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண்நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

 

🥨பாக்டீரியாக்களைக் கொல்ல…

நோய்களை உருவாக்கிய சில வகை பாக்டீரியாக்கள், மருந்து செலுத்தும் போது மட்டும் தன் இனப்பெருக்கத்தை நிறுத்தி, செயல் இழந்துவிடும். பின்பு மருந்தின் தன்மை குறைந்ததும் செயல்படத் துவங்கிவிடும். இதனால் அவற்றைக் கொல்ல பாரைட் (Paride) என்று பெயரிடப்பட்டுள்ள சில வகை வைரஸ்களைப் பயன்படுத்த முடியும் என்று சுவிட்ச ர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

🪫புதுவகை  பாட்டரி

சீனாவின் பீடா வோல்ட் என்கின்ற நிறுவனம் வைர குறை மின்கடத்தி, கதிரியக்க நிக்கல் ஐசோடோப் ஆகியவற்றைக்  கொண்டு ஒரு புது பாட்டரியை வடிவமைத்துள்ளது. இது விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ-ரோபோட்கள் சாதனங்களை, சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவையுடன்  பாட்டரி 50 ஆண்டுகள் தொடர்ந்து இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

 

 🤖சரிசெய்ய ரோபோ

பாதாள எரிவாயு குழாய்களில் பிரச்னை ஏற்படும் போது குறிப்பிட்ட அந்தப் பகுதியில் குழாய் அகழ்ந்து எடுக்கப்பட்டு சரிசெய்து பொருத்துவர். இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகிறது. இதற்கு மாற்றாக குழாய்களுக்கு உள்ளேயே சென்று சரி செய்யும் ரோபோ ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த கார்னகி மெல்லன் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். 27 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ, 14.5 நீள குழாய்களைக் கண்காணிக்க 8 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

 

🍄கண்டறியப்பட்ட சிப்பிக் காளான்



கடலிலே கச்சா எண்ணெய் கொட்டிவிட்டால் அதை அகற்ற தற்போது 'ஜேனஸ் மெம்பரைன்கள்' எனப்படும் ஒருவகைப் படலங்கள் பயன்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை. அதனால் இவற்றுக்குப் பதிலாக சிப்பிக் காளான்களைப் பயன்படுத்தலாம் என்று அரேபியாவில் உள்ள அப்துல்லா பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிப்பிக் காளான்களில் இருந்து உருவாக்கப்படும் இந்தப் படலங்கள் வழக்கமான படலங்களை விட, 445 சதவீதம் அதிகமான எண்ணெயை உறிஞ்சி எடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை, இயற்கையிலேயே மக்கிவிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை.

 

🏥புற்றுநோய்- புதிய மருந்து

புற்றுநோய் செல்களில் அதிகளவிலான சுண்ணாம்புச் சத்தைப் படியவைத்து அவற்றை சுலபமாக அழிக்கும் புதிய மருந்தைச் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலிக்கான் நானோ துகள்களாலான இந்த மருந்தை எலிகளில் சோதித்துப் பார்த்தனர். மருந்தானது பாதிக்கப்பட்ட செல்களில் படிந்தது. அதற்குப் பின் அதன் மீது அச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தியபோது புற்றுசெல்கள் அழிவுற்றன. மனிதர்களிடமிருந்து வெளியே எடுக்கப்பட்ட புற்றுக் கட்டிகள் மீதான சோதனையிலும் இந்த மருந்து வேலை செய்தது.

தொகுப்பு செ மனுவேந்தன்

No comments:

Post a Comment