"FOOD HABITS OF TAMILS" PART / "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"" / "Food Habits Of Ancient Sumer continuing"" [தமிழிலும்ஆங்கிலத்திலும் / In English and Tamil]
மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து, பியர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது. மெசொப்பொத்தேமியா, நகர்ப்புற உயர் வகுப்பினர் காலையிலும், அந்தியிலும் இரண்டு முக்கிய உணவையும், அத்துடன் இரண்டு சிறிய சிற்றுண்டிகளையும் சேர்த்து மொத்தமாக நாலு வேளை உணவு அருந்தினாலும், பொது மக்கள், வேலையாட்கள், குறிப்பாக விவசாயிகள் அப்படியில்லை. அவர்கள் பொதுவாக இரண்டு வேலை உணவு மட்டுமே அருந்தினார்கள். மேலும் அவர்கள் சாப்பிடும் போது, இன்றைய முள்ளுக் கரண்டிகளைப் போல - ரொட்டித் துண்டுகளை, பல உணவுகளை கூட்டி எடுக்க அதிகமாக பாவித்தாலும், பெரும்பாலும் அவர்கள் கைகளாலேயே உணவை எடுத்து உட்கொண்டார்கள். அது மட்டும் அல்ல, இறைச்சிகள், எடுத்து உண்பதற்கு ஏற்றவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பே பரிமாறப்பட்டது. மெசொப்பொத்தேமியா நகரங்கள் முழுவதும் தவறணைகள் இருந்தன, அங்கு வைன், பியருடன் உணவு பண்டங்களும் கூட இருந்தன. சுமேரியாவில், பெண்களே பொதுவாக, வீட்டு சமையலுக்கு பொறுப்பாக இருந்தனர்.
"என் மனைவி திறந்த வெளி ஆண்டவன் சன்னதியில், என் தாய் ஆற்றங்கரையில், நான் பசியில் சாகிறேன்! ["Since my wife is at the outdoor shrine and my mother is at the river, I shall die at hunger"]என்ற சுமேரியன் பழமொழி இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. அத்துடன், அரண்மனை, ஆலய உயர் வகுப்பினர் பெரிய விலங்குகளின் மாமிசத்தை உட்கொள்ளுவதை அதிக வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், வேலையாட்களும் விவசாயிகளும் அப்படி இல்லை. மன்னர்கள் இரவில், விளக்கொளியில் அல்லது பந்த ஒளியில் விருந்துகள் [இது உலகின் முதலாவது மெல்லொளி இரவு விருந்தாக -Twilight Dinner- இருக்கலாம்?] வைத்தார்கள். இவை கை கழுவுதலுடன் ஆரம்பித்து, கை கழுவுதலுடன் முடிந்தன. மேலும் இந்த விருந்தில், விருந்தினர் தமது வகுப்புப் படிநிலைப்படி, தமது தொழில், இனம், மற்றும் அவர்களின் சமுக பொருளாதார நிலையின் படி, அந்த அந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர்.
சுமேரிய இலக்கியத்தில் ஆண்டவனின் உணவு, ஒரு பிரபலமான உட்பொருளாகவும் உள்ளது. மனிதனின் தேவைகளை ஒத்த தேவைகள் ஆண்டவனுக்கும் உண்டு என்ற நம்பிக்கை மெசொப்பொத்தேமியரிடம் காணப்பட்டன. ஆண்டவனுக்கு பொதுவாக நாலு வேளை உணவு படைக்கப்பட்டன. பெரிதும் சிறிதுமாக காலையில் இரு உணவும், மீண்டும் பெரிதும் சிறிதுமாக பிற்பகலிலும்,பின்னேரத்திலும் இரு உணவும் படைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் பின் மத குரு படையலை திருப்பி எடுத்து - அப்படி எடுத்த மிச்சத்தை? - அரச குடும்பத்தினருக்கு வழங்கினர். இதனால் இந்த உயர் வர்க்கத்தினர்கள் நாலு வேளை உணவு முறைக்கு அதிகமாக பழக்கப்பட்டு இருக்கலாம்?. பொதுவாக ஆண்டவன் உணவில் - பானங்கள், கஞ்சி, ரொட்டி, பியர், வைன், தண்ணீர், போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன. பால் அதிகமாக காலையில் மட்டுமே படைக்கப்பட்டன. இவ்வாறே பண்டைய சுமேரியர்களின் உணவு பழக்கங்கள் பொதுவாக காணப்பட்டன என எம்மால் அறிய முடிகிறது.
தனிப்பட்ட அளவில், நாம் எல்லோரும் எம் பண்பாட்டு உணவுகளை முதன்மையாக உண்ணுகிறோம். அது எம்மை அடையாளப் படுத்துகிறது. பொதுவாக பெரும்பாலான நாம், எமது உணவுகளுடன் பழக்கப் பட்டதுடன், அது எம்மை குடும்பத்துடன் இணைப்பதுடன், எங்களுக்காக ஒரு சிறப்பு மற்றும் தனிப்பட்ட மதிப்பையும் அது வைத்திருக்கிறது. ஆகவே, உணவு என்பது
ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரம் என்பதற்கு மேல், எம் பண்பாடு, வரலாறு மற்றும் இலக்கியத்துடனும் தொடர்புடையது. இது மக்களை ஒன்று கூட்டி சமூகங்களாக ஒன்றிணைக்கிறது. அது மட்டும் அல்ல, இது இன்று ஒரு பொழுதுபோக்காகவும், ஒருவரிடம் வேட்கை அல்லது ஒரு பேரார்வத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும்
மற்றும் ஒரு தொழிலாகவும் கூட செயல்படுகிறது [It serves as a hobby, a passion,
and a profession too].
எமக்கு எல்லோருக்கும் வரலாற்று ரீதியாக தெரியும் ரொட்டி அல்லது பாண் மனிதன் தயாரித்த உலகின் முதல் உணவில் ஒன்று என்று. இது ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து இருக்கலாம். இது சுமேரியரின் சமையல் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. சுமேரியர்கள் இதை 'கறி' ஒன்றுடன் உட்க்கொண்டார்கள் என்று கி மு 1700 ஆண்டு சுமேரியன் வில்லை ஒன்று கூறுகிறது. இது நாம் இன்று உண்ணும் கறியை போன்றது. கறி (Curry) என்பது பொதுவாக
குழம்பு, பிரட்டல் போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது. இந்த கறி [kari -
Curry]என்ற சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும். இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்து சம வெளி மக்கள், தமது உச்ச நாகரிக கட்டத்தில், மூன்று முக்கிய சேர்மானங்களான - இஞ்சி, உள்ளி, மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய - கறி [the predecessor to curry] சமைத்துள்ளார்கள் என அகழ்வாராச்சி உறுதிப் படுத்துகிறது.
இலங்கையில் கூட, இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1270), தனது மதிய உணவாக பலவித கறிகளுடன் சோறு [rice and a number of curries] உட்க்கொண்டான் என முகாம் பழக்கவழக்கங்கள் [කඳවුරු සිරිත / Camping customs] என்ற குறிப்பில் பதியப் பட்டுள்ளது.
அப்படியே, கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்ட ரொபெர்ட் நொக்ஸ் (Robert Knox / 1659-1679) தனது புத்தகத்தில், மலை நாட்டு கிராம வாசிகளின் பாரம்பரிய உணவாக சோறும் கறியும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இனி "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள்" பற்றிப்
பார்ப்போம்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி
: 16 தொடரும்
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 16
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:
"FOOD
HABITS OF TAMILS" PART: 15 "
Food
Habits Of Ancient Sumer continuing"
A clay tablet discovered in Mesopotamia dating back to 1800
BC clearly depicts a woman drinking beer from a jug while she was enjoying sex
with her husband. Further we understand that In Mesopotamia, Urban elites
usually, ate four times daily ,two main meals, one in the morning and one at
twilight, with two smaller snacks - labourers, especially farmers out in the
field, tended to have only two meals. People used bread to scoop up many foods
and probably ate directly with their fingers. Meats probably were carved into
serving pieces before presentation. Taverns where wine, beer and food could be
enjoyed, existed throughout Mesopotamia's cities. Woman were generally
responsible for cooking at home. According to one of the Sumerian proverb:
"Since my wife is at the outdoor shrine and my mother is at the river, I
shall die at hunger", confirm above. Palace and temple elites had access
to meat from large animals more regularly than did urban workers and farmers.
Kings hosted banquets at night, under the torches and oil lamps [May be the
first Twilight Dinner?]. Formal dinners opened and closed with hand washing.
Guests were usually anointed with perfumed oil and incense burned there. Also
guests at formal banquets observed strict hierarchy and sat at specified places
according to profession, ethnicity, and status at the court.
The gods' meals were a popular literary theme and
Mesopotamians believed that gods' needs paralleled humans wants. The gods
enjoyed four daily meals, large & small ones in the morning and large &
small ones again in the afternoon and evening. After an appropriate interval,
the priests removed the gods' meal and served the "leftovers?" to
members of the royal household. Usually, the god's meal opened with beverages,
porridges and bread. Beer, wine, and water were offered at all meals, milk was
offered only in the morning.
On an individual level, we grow up eating the food of our
cultures. It becomes a part of who each of us are. Many of us associate food
from our childhood with warm feelings and good memories and it ties us to our
families, holding a special and personal value for us. So, Food is so much more
than just a source of nourishment and subsistence. Its richness colours
culture, history, and even literature. Its unite and brings people together
into communities by creating a sense of familiarity and brotherhood. Some might
go so far as to say that food is one of the major forces forging a national
identity. It serves as a hobby, a passion, and a profession.
Most of us know that bread was one of the first foods
prepared by man, some 30,000 years ago. and
have mentioned in Sumerian recipe too. These breads were served with
some kind of spicy gravy as early as 1700 BC as per Sumerian tablets, which is
similar to Indian curry. This aromatic
food is a medley of colours, spices, and herbs. They can be vegetarian or fish,
poultry or meat - based. But one used in Sumeria was generally meat based. In
fact, from the excavations at Harappa
and Mohenjo-Daro, belonging to the period between 2800 – 2000 BC, we found that
“curry” one of the oldest food items in the world, was prepared in Indus Valley
civilization, (or at least the predecessor to curry) more than 4,000 years ago.
The name curry, originally came from kari, a word in Tamil that means sauce or
gravy. Indus valley people, often used stone mortar and pestle to finely grind
spices such as fennel, mustard, cumin and others. But As pointed out by historians, the curry was
often eaten in Indus Valley civilization with rice, which was already being
cultivated in the area nor with bread as in Sumeria.
Even in Sri Lanka, we find from a book called
'Kandavuru da sirita' [කඳවුරු සිරිත / Camping customs], which gives the diary of Parakrama bahu
II (1236-1270), in which he lists his
midday meal. It consisted of rice and a number of curries. Also, Knox
(1659-1679) said rice and curry was the traditional food in an Udarata village.
Now let's look at the "Food habits of Ancient Indus valley people or Harappans"
Thanks
[Kandiah
Thillaivinayagalingam,Athiady, Jaffna]
PART : 16 WILL FOLLOW
No comments:
Post a Comment