"பூவெல்லாம் உன் வாசம்"
"பூவெல்லாம் உன் வாசம் வீசுதே
பூத்துக் குலுங்குதே என் உள்ளம்!
பாவெல்லாம் உன் அழகை வடித்தே
காத்துக் கிடந்தேனே உன்னை அணைக்க!
நாவெல்லாம் உன் பெயரைச் சொல்லுதே
பா[ர்]த்து ரசிக்கவே மனம் ஏங்குதே!"
"வானெல்லாம் உன் தாரை ஒளிருதே
காதல் பொழிந்து என்னை வாட்டுதே!
தேனெல்லாம் உன் இதழில் பருக
கூதல் காற்று என்னைக் கொல்லூதே!
கனவெல்லாம் உன் ஊடல் வருத்த
சாதல் கூட எனக்கு இனிமையானதே!"
"மடல் விரிந்த மலரே"
"மடல் விரிந்த மலரே ரோசாவே
உடல் மலர்ந்த அழகு பதுமையே
அடல் திருக்கை வால் கருங்குழலையே
மடல் வரைந்து உன்னைக் கேட்கிறேன்
கடல் அலையாக ஆசை மோதுதே
கூடல் கொள்ள என்னுடன் வருவாயோ?"
"வாடல் நோயில் சுழரும் என்னை
ஆடல் நளினத்தில் மனதைக் குணப்படுத்தி
பாடல் இசையில் புத்துணர்ச்சி தந்து
தேடல் உள்ளத்தில் உன்னை நிறுத்தாயோ!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment