சிரிக்க.... சில நிமிடம்

 நகைச்சுவை = ஜோக்ஸ் 


 குற்றம் சாட்டப்பட்ட குடி 

நீதிபதி அவனைப் பார்த்து "இப்பொழுது நீ நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். குடிப்பது கெட்ட பழக்கம் என்று உனக்குப் புரிந்து இருக்கும். நீ மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரின் மீது கோபம் கொண்டிருக்க மாட்டாய். குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரைச் சுட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.

குறுக்கிட்ட அவன், "நீதிபதி அவர்களே! நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன். குடித்ததனால் என் குறி தவறி விட்டது" என்றான்.

 

அதிசயம்

பேப்பர் பையன் "அதிசயம் ஐம்பது குற்றவாளிகள்" என்று கத்திக் கொண்டே சென்றான்.

வழியில் வந்த ஒருவர் ஆர்வத்துடன் பேப்பரை விலைக்கு வாங்கிப் பக்கங்களைப் புரட்டினார். "பையா! நீ கத்தியது போன்று எந்தச் செய்தியும் இல்லையே" என்றார்.

இது தான் அதிசயம், ஐம்பத்தோரு குற்றவாளிகள் என்று கத்திக் கொண்டே சென்றான் பேப்பர் பையன்".

 

இனிய மனிதர்கள்

 "உங்களைப் போல குண்டான மனிதர்கள் எப்பொழுதும் இனிய பண்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். யாரையும் கோபப்படுவது இல்லையே. ஏன்?" என்று கேட்டான் ஒருவன்.

"எங்களால் சண்டை போடவும் முடியாது. ஓடவும் முடியாது. அதனால் தான்" என்று பதில் தந்தார் பருமனானவர்.

 

என்னை யார்னு தெரியுமா?

ஒரு விழாவில் சிறிது தொலைவில் தன் தலைமையாசிரியரை பார்த்து விட்டான் சிறுவன் ஒருவன். தன்னை முன் பின் அறிந்திராத பக்கத்திலிருந்த சிறுவனிடம் ...

அதோ வருதே, அந்த கிழத்தைப் பார்த்தியா? என்ன அவலட்சணமான உருவம். எங்க பள்ளியிலேயே எல்லோரும் வெறுக்கும் ஒரே ஆள் அந்தக் கிழம் தான், என்றான்.

உடனே அந்தச் சிறுவன், நான் யார் தெரியுமா? நீ திட்டற அந்த ஆளோட ஒரே மகன், என்றான்.

என்னை யார்னு தெரியுமா? என்று எச்சிலை விழுங்கிக் கொண்டே அச்சத்துடன் கேட்டான் சிறுவன்.

அந்தச் சிறுவன் தெரியாது என்றான்.

அப்பாடா! தப்பித்தேன், என்று ஓட்டம் பிடித்தான் அவன்.

 

துப்பாக்கி அடைவுக்கோ

பட்டப் பகலில் வட்டிக் கடைக்குள் நுழைந்த திருடன் ஒருவன் கடைக்காரரை நோக்கித் தன் துப்பாக்கியை நீட்டி, கையைத் தூக்கு, இல்லையேல் சுட்டு விடுவேன், என்றான்.

உடனே கடைக்காரர், துப்பாக்கி நன்றாக இருக்கிறது, அதற்கு அதிகபட்சம் முந்நூறு ரூபாய் தர முடியும், என்றார்.

 

பெண்டாட்டிக்கு ஒரு வழி

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

 

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

 

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

 

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

 

பூனையைப் பிடிக்கும்

 ஆசிரியர் என் பேத்தியிடம் கேட்டாவாம் 'உனக்குப் பிடிச்ச விலங்கு எது? எண்டு. அதுக்கு இந்தசுட்டி 'பூனை'எண்டு சொன்னாளாம்.அப்ப   ஆசிரியர் 'ஏன் பூனையைப் பிடிக்கும்' எண்டு கேட்டிருக்கிறா.அதுக்கு அவள் சொன்னாளாம்  'காலையில பூனை குறுக்க வந்தால் பாட்டி தன்னை school க்கு விடமாடடா,அதனால பூனை பிடிக்கும்' எண்டாளாம்.

 

நாங்களும் பிரதமர் தான்

பைத்தியக்கார  ஆஸ்பத்திரிக்கு சிறிமோவோ சென்றபோது பையித்தியங்கள் எல்லாம் தங்கள் பாட்டில் இருந்து கொண்டு சிறிமாவை கவனிக்கவில்லை. உடனே நான் தான் இந்த நாட்டு பிரதமர் என ஒரு பைத்தியத்திடம் அறிமுகம் செய்ய உடனே 

'நாங்களும் இங்குவரும் போது பிரதமர்தான் என்று சொல்லிக்கொண்டு வந்தனாங்கள், போகப்போக எல்லாம் சரிவரும் உள்ளுக்கு போ' என்றது.

 

இவரல்லவோ கணவர்  

(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் )

 

கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !

 

மனைவி: இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !

 

கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!

 

மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !

 

கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,

ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !

 

மனைவி : !!!!! ????

 

கிள்ளியது ஏனோ?

ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.

 

கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க

 

"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.

 

கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,

 

மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment