உலக மக்கள் எல்லோரும் தீராத நோய்களுடன் எப்பொழுது வாழ்ந்துகொண்டு இருக்கவேண்டும் என்று விரும்புவர்கள் இரு கூட்டம். ஒன்று மருத்துவ உலகம்; மற்றயது அரசாங்கம். இரு சாராரும் தங்கள் சொந்த வருமானத்திற்காக மக்களைப் பலிக்கடா ஆக்குவதில் முன் நிற்பவர்கள்.
இது பற்றி, சமூக அக்கறை கொண்ட பல வைத்தியர்களே முறையிட்டிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி....
புற்றுநோய் என்றால் என்ன என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும், முற்றிய புற்று நோயை ஒருபோதும் குணப்படுத்த முடியாது என்றும் தெரியும். ஆனால், ஓர் அற்ப ஆசையினால், அது வேலை செய்யாது என்று அறிந்திருந்தும் நாங்கள் இன்னும் சிகிச்சை பெறுகிறோம். அது என்ன? கீமோதெரபி. (நிச்சய) மரணம் நிகழும்வரை பணம் செலவு செய்து தொடர்ந்து செய்யத் தூண்டப்படுகிறோம். ஏன்? ஒரு பொய் வாக்குறுதி; ஓர் அற்புதம் நிகழாதோ என்ற அங்கலாய்ப்பு!
மேலும் நிறைய விஷயங்கள், அவை பலன் தராது என்று தெரிந்திருந்தும் செய்து கொள்ளுகிறோம்; செய்யத் தூண்டப்படுகிறோம். ஏன்?
இது ஒரு பெரிய வணிகம்; உலகளாவிய பல கோடானு கோடி டொலர் வர்த்தகம்!
பெரும்பாலான புற்றுநோயானது புகையிலை அல்லது மதுபானங்களினால் ஏற்படுகிறது என்பது எங்களுக்கும் தெரியும்; நம்மை ஆளும் அரசாங்கங்களுக்கும் தெரியும். அதை உற்பத்தி செய்து விற்பவர்களுக்கும் தெரியும். ஆனால் உலகில் எந்த அரசாங்கமும் புகையிலை மற்றும் மதுபானங்களைத் தடை செய்ய முன்வரவில்லை. ஏனென்றால், இப்பொருள்களுக்கு நிறைய அரச வரி விதிக்கப்படுகிறது என்பதால். அரசாங்கங்கள் வரியில் இயங்குகின்றன. வரிப் பணம் புகையிலை மற்றும் மதுவிலிருந்து நிறைய - நிறையவே - வருகிறது. எனவே, எங்களுக்குப் புற்றுநோய் தொடர்ந்து இருக்க வேண்டும்; மாறிவிடவே கூடாது. அது ஒரு வியாபாரம். புற்றுநோய் ஒழிந்தால், அதை ஒன்றிய மருத்துவம் சார்ந்த தொழில்கள் மறைந்துவிடும்.
அதேபோல நீரிழிவு நோய் ஒழிந்தால் பல தொழில்கள் அழியும். மருந்து மற்றும் இன்சுலின் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்படும். அரச வரி குறைந்துவிடும்.
நீரிழிவு உண்மையில் ஓர் எளிய நோய். நீரிழிவு என்பது சர்க்கரை நோய் அல்ல, சர்க்கரை ஒரு குறிகாட்டி மட்டுமே. இது வளர் சிதை மாற்றம் மூலம் முற்றிலும் சீர்குலைந்த கல்லீரலின் நோயாகும். இரசாயன மருந்துகள் உங்கள் மூளையை பாதிக்கும்.
உங்கள் சர்க்கரைநோய் முதலிய நோய்கள் உங்கள் மூளையில் இல்ல, உங்கள் மனதில் உள்ளது. உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் சர்க்கரை நோய் நீங்கும்; உங்கள் இதய நோய் நீங்கும்; உங்கள் புற்றுநோய் நீங்கும். நீங்கள் கோபப்பட்டால் எல்லா நோய்களும் உங்களுக்கு வரும்.
எங்காவது, மாத்திரைகள் மூலம் உங்கள் நீரிழிவு, கொழுப்பு, இரத்த அழுத்தம், கண் புரை, கண் அழுத்தம் வாதம் முதலிய நோய்கள் தணிந்து, மாத்திரைகள் உட்கொள்ளும் அளவுகளைக் குறைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்பொழுதும் கூட்டிக்கொண்டுதானே போவார்கள்!
நாடுகள், பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவதால்; மருத்துவம் சார்ந்த தொழில்கள் ஓஹோ என்று வளர்கிறது; மருத்துவர்களுக்கும் வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறது. அரசு வரி ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு தொழிலாளரிலும், ஒவ்வொரு படியிலும் இருந்து வந்து குவிந்துகொண்டே இருப்பதால், நோய்களுக்கான ஆணி வேர்களைக் கிள்ளி எறியாது, நீர் ஊற்றிப் பாதுகாப்பது அரச கடமை ஆகிறது.
அதுதான் அவர்களுக்குத் தேவை! வர்த்தகம், வருமானம், காசு, பணம், துட்டு!
No comments:
Post a Comment