42. கேள்வி
👉குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
அச்செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.
மு.வ உரை:
செவியால் கேட்டறியும்
செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்
எல்லாவற்றிலும் தலையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் கேட்டுப் பெறும்
செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
கலைஞர் உரை:
செழுமையான கருத்துகளைச்
செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
English Explanation:
Wealth (gained) by
the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
👉குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து
சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
மு.வ உரை:
செவிக்கு கேள்வியாகிய
உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி
கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
கலைஞர் உரை:
செவி வழியாக இன்பம் தரும்
உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
English Explanation:
When there is no
food for the ear, give a little also to the stomach.
👉குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார்
அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
மு.வ உரை:
செவியுணவாகிய கேள்வி உடையவர்
நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப்
பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய்
முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த
அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர்
எண்ணப்படுவர்.
English Explanation:
Those who in this
world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods,
who enjoy the food of the sacrifices.
👉குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க
அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
மு.வ உரை:
நூல்களைக் கற்றவில்லையாயினும்,
கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த
போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கல்லாதவனே என்றாலும் கற்றவர்
கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது
பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
கலைஞர் உரை:
நூல்களைக் கற்காவிட்டாலும்,
கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப்
போலத் துணையாக அமையும்.
English Explanation:
Although a man be
without learning, let him listen (to the teaching of the learned); that will be
to him a staff in adversity.
👉குறள் 415:
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ
லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச்
சொல்.
மு.வ உரை:
ஒழுக்கமுடைய சான்றோரின்
வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்று, ஒழுக்கம் மிக்கவரின்
வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில்
உதவும்.
கலைஞர் உரை:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு
ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
English Explanation:
The words of the
good are like a staff in a slippery place.
👉குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க
அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
மு.வ உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும்
நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிது நேரமே என்றாலும்
உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
கலைஞர் உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக்
கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
English Explanation:
Let a man listen,
never so little, to good (instruction), even that will bring him great dignity.
👉குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை
சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
மு.வ உரை:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த
கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச்
சொல்லார்.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து,
கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
கலைஞர் உரை:
எதையும் நுணுகி ஆராய்வதுடன்
கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும்
அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
English Explanation:
Not even when they
have imperfectly understood (a matter), will those men speak foolishly, who
have profoundly studied and diligently listened (to instruction).
👉குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே
கேள்வியால்
தோட்கப் படாத செவி.
மு.வ உரை:
கேள்வியறிவால் துளைக்கப்
படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத்
தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத
செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய
காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே
கூறப்படும்.
English Explanation:
The ear which has
not been bored by instruction, although it hears, is deaf.
👉குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார்
வணங்கிய
வாயின ராத லரிது.
மு.வ உரை:
நுட்பமான பொருள்களைக்
கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம்
இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள்,
அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
English Explanation:
It is a rare thing
to find modesty, a reverend mouth- with those who have not received choice
instruction.
👉குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின்
மாக்கள்அவியினும் வாழினு மென்.
மு.வ உரை:
செவியால் கேள்விச் சுவை
உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும்
என்ன.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் நுகரப்படும்
சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன?
இறந்தால்தான் என்ன?
கலைஞர் உரை:
செவிச்சுவை உணராமல் வாயின்
சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
English Explanation:
What does it matter
whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by
the ear?
திருக்குறள்
அடுத்த வாரம் தொடரும்….
Theebam.com: திருக்குறள்...-/43/-அறிவுடைமை:
0 comments:
Post a Comment