கும்மியடி... & மணந்தே வாழ்வோம் (கவிதை)


"கும்மியடி கும்மியடி"


"மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை

சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி 

விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன்

விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி"

 

"கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது

ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி

பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது

புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி"

 

"விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே

விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி

சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு

சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி"

 

"வந்தேறு குடிகள் தமிழர் அல்ல

வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்மியடி

தொல்பொருள் இணைக்குது இலங்கை தென்னிந்தியாவை

தொலையாத சாட்சிகள் கும்மியடி கும்மியடி"


🏌🏌🏌🏌🏌🏌🏌🏌 

 

"மனதால் இணைந்தோம்

மணந்தே வாழ்வோம்"

 

"அனல் வீசிய தனிமை தொலைய

அன்பு கொட்டிய குளிர்மை சேர ...

அல்லி மலரும் மாலைப் பொழுதில்

அம்புலி நிலவு அழகு பொழிய ...

அக்கம் பக்கத்தார் வாழ்த்துக் கூற

அந்தணர் தவிர்த்து இருவரும் சேர்ந்தோம்!"

 

"மகர தோரணம் தென்றலில் ஆட

மகிழ்ச்சிக் கடல் பொங்கி வடிய ...

மங்கள இசை இனிமை கொட்ட

மனது இரண்டும் இன்பத்தில் மூழ்க ...

மன்றல் கமழும் மலர்மாலை அணிந்து

மனதால் இணைந்தோம் மணந்தே வாழ்வோம்!"

 💒💒💒💒💒


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment