விஞ்ஞானம் வழங்கும் விந்தைகள்

விஞ்ஞானம் =அறிவியல் 



😋புற்றுநோய் ஏற்படுத்தும் உணவு வகைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக உடலுக்கு கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறிவோம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூன்று வகையான புற்று நோய்களை உருவாக்கும் என்று கண்டறிந்துள்ளது.

 இங்கிலாந்தைச்  சேர்ந்த ப்ரிஸ்டால் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஐஸ்கிரீம் பிஸ்கட் வகைகள் குளிர்பானங்கள், சோர்ஸ், சிப்ஸ் ஆகியவை

 அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பட்டியலில் வரும்.

 ஆய்வில் 35 முதல் 69 வயதை சேர்ந்த  111 நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அதீதப்படுத்தப்பட்ட அதிகமாக பாதப்படுத்தப்பட்ட பிரட் ரெஜி பால் பொருட்கள் குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்வு முடிவில் அவர்களின் பெரும் பாலுணருக்கு தலை கழுத்து உணவுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

 பொதுவாக இந்த வகை உணவுகளில் அதிக அளவு கொழுப்பு இருக்கும். இவற்றை உண்பதால் உடல் பருமன் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இந்த கொழுப்பு தான் புற்றுநோய் வருவதற்கு காரணம் என்று நினைத்திருந்தனர்.

 ஆனால் இந்த வகை உணவுகளில் பதப்படுத்துவதற்காக பயன்படும் ரசாயனங்கள் சுவையூட்டிகள் அதீத இனி போட்டிகள், இயற்கை நிறமிகள் மணம் ஊட்டிகள் ஆகியவைதான் புற்றுநோயை உருவாக்குகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 எனவே இந்த வகை உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அதே நேரத்தில் இவற்றில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ரசாயனங்களை கட்டுப்படுத்துவதும் காலத்தின் கட்டாயம் தான்.


🤕புற்றுநோயைக் குணப்படுத்த….

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மயக்க மருந்தாகப் பயன்பாட்டில் உள்ள லிடோகெய்ன் (Lidocaine) எனும் மருந்தை, தலை, கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

🔭புதிய ஸ்டெதஸ்கோப்

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்து இதயத்துடிப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பார்ப்பார். தற்போது உடலோடு ஒட்டிக் கொண்டு இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், மூச்சு ஆகியவற்றைக் கண்காணிக்கும் புதிய ஸ்டெதஸ்கோப்பை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை உருவாக்கி உள்ளது. 4 செ.மீ., உயரமும், 2 செ.மீ., அகலமும், 0.8 செ.மீ. தடிமனும் கொண்ட இந்தச் சிறிய கருவியில் மைக், பேட்டரி, ப்ளூடூத் ஆகியவை உள்ளன.

 

🥤மறதி நோய்களுக்குக் காரணமான

பல்வேறு வகையான மறதி நோய்களுக்குக் காரணமானவை மூளையில் உள்ள செயல்களை தாக்கும் நுண்ணுயிர்கள்தான். இவற்றிலிருந்து மூளை செயல்களைக்  காக்கின்றதிறன், பயன்படுத்தப்பட்ட காப்பித்  துகள்களில் இருந்து எடுக்கப்படும் கார்பன் குவான்டம் புள்ளிகளுக்கு இருப்பதை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.


🌱தாவர உணவே சிறந்தது

 எந்த உணவு முறை சிறந்தது? சைவமா? அதைவமா சைவம் தான் சிறந்தது என்று ஒரு தரப்பும் அசைவத்தில் தான் உடலுக்கு தேவையான புரோட்டீன் உள்ளது என இன்னொரு தரப்பும் சொல்லி வருகின்றன.

 இதில் எது சிறந்தது என்பதை ஆராய ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கலை ஆய்வுக் குழுவினர் 22 இரட்டியர்களை தெரிவு செய்து ஆய்வு செய்தனர். ஒருவருக்கு சைவ உணவு வகைகளையும் மற்றொருவர்களுக்கு அசைவ உணவு வகைகளையும் தொடர்ந்து எட்டு வாருங்களுக்குக்  கொடுத்தனர்.

 இரண்டு உணவு திட்டங்களிலும் காய்கறிகள், பருப்புவகைகள், முழுத்  தானியங்கள் ஆகியவை இருந்தன. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது கூடவே முட்டை, மீன், சிக்கன் வழங்கப்பட்டது. இருதரப்பினருக்குமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிக மாவுசத்து உள்ள உணவுகள் தவிர்க்கப்பட்டன.

சைவ உணவு சாப்பிட்டோரின் இதய  நலம் சிறப்பாக இருந்தது. மேலும் அசைவம் சாப்பிட்டுவோரை விட, சைவ உணவு சாப்பிட்டோர் சுறுசுறுப்பாக இருந்ததாக சொல்கின்றனர்.

 ஆய்வின் முடிவில் வழக்கமாக அசைவம் சாப்பிடுவோர்கூட இரண்டு மாதங்கள் இந்த "வீகன் டயட்" அதாவது தாவர உணவுகளை உட்கொண்டால் தாங்கள் உடல் நலனில் பெரும் மாற்றத்தை காணலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

🏥மருத்துவமனைகளுக்கான புதிய கிருமி நாசினி

 நாம் மருத்துவமனைக்கு செல்வது நம்முடைய நோயை குணப்படுத்திக் கொள்வதற்காக. ஆனால் நமக்கே தெரியாமல் நாம் அங்கிருந்து நோய் கிருமிகளை சுமந்து கொண்டு வீட்டுக்கு வருகிறோம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை அதுதான். மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு பொருட்களில் தீமை உண்டாக்கும் நச்சு கிருமிகள் இருக்கின்றன. கைப்பிடிகள் அல்லது உலோகத்தால் ஆன பொருட்களில் கிருமிநாசினி  தெளித்து அவ்வப்போது சுத்தம் செய்வதால் கிருமிகள் அழிந்து விடுகின்றன.

 ஆனால் நோயாளிகளுக்கு பயன்படும் மெத்தை, துணி, போர்வை ஆகியவற்றில் உள்ள நச்சு கிருமிகளை அவ்வளவு சுலபமாக அழித்துவிட முடியாது.

 இதற்காக ஜெர்மனியைச்  சேர்ந்த பெர்லின் டெக்னிக்கல் பல்கலை மற்றும் சில ஆய்வகங்களோடு சேர்ந்து ஒரு புது கிருமி நாசினியை உருவாக்கி இருக்கிறது.

 இதில் 'பெண்சால்  கோனியம் குளோரைடு' என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. இதைச்  சரியான அளவில், சரியான முறையில் துணிகளில் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தனர்.

 பொதுவாக மருத்துவமனைகளில் காணப்படும் 'ஸ்டாஃபிலோகாக்கஸ், சூடோமோனஸ்' உள்ளிட்ட பாக்டீரியாக்களை அந்தத் துணிகளின் மீது  தெளித்து பத்து நிமிடம் கழித்து சோதனை செய்ததில் அதிலிருந்து 99 சதவீத பாக்டீரியாக்கள் அழிந்தது எனத் தெரிய வந்தது.

 இந்த துணிகளை ஆறு மாதங்கள் அப்படியே விட்டு விட்டாலும் கூட இவற்றின் கிருமி நாசினி தன்மை குறையவில்லை. அதேபோல 5 ஆண்டுகள் கழித்தும் இவை அப்படியே இருக்குமா என்று கவனித்ததில் நம்பிக்கையான முடிவுகளை கிடைத்தன. அடிக்கடி துவைக்கப்படும் பொருட்கள் மீது இந்த கிருமி நாசினியை தெளிக்க முடியாது ஏனெனில் ஒரு முறை துவைத்தாலே கிருமினாசினி தண்ணீரில் கரைந்து போய்விடும்.

 இதனால் அதிக கால இடைவெளியில் துவைக்கப்படும் பொருட்கள் மீது இந்த கிருமி நாசினியை தெளித்து வைத்து பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

💋🤕புற்று நோயை தடுக்கும் பீன்ஸ்

பொதுவாக மொச்சை வகைகளில் ஒன்றான காய்ந்த நேவிபீன்ஸ் சாப்பிட்டால் வாயுத்தொல்லை, வயிற்றில் உப்புசம் ஆகியவை ஏற்படும் இதனால் பெரும்பாலானோர் இதனைத்  தவிர்க்கின்றனர்.

 ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த பீன்ஸ்  சாப்பிடுவதன் மூலம் உடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் பயன் அடைவதாகவும், இதனால் புற்றுநோய் தடுக்கப்படுவதாகவும் கண்டறிந்து இருக்கின்றனர்.

 அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'எம்டி ஆண்டர்சன் கேன்சர் சென்டர்' நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

 குடல் புற்றுநோய், உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த 48 ஆண். பெண் நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். 16 வாரங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு குவளை நேவி பீன்ஸ் கொடுத்தனர்.

 இந்த பீன்ஸில் அதிக அளவில் அமினோ அமிலங்களும் சத்தும் இருக்கின்றன. இதை தொடர்ச்சியாக உண்ட பின்பு நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்தனர்.

 அதில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியாவின் அளவு உடலில் குறைந்து இருப்பதும் நன்மை செய்யக்கூடிய 'ஃபேசலி பாக்டீரியம், யு பாக்டீரியம், பைபோடோ பாக்டீரியா' ஆகியவை அதிகரித்துள்ளதும்  தெரியவந்துள்ளது.

 அடுத்தகட்ட ஆய்வில் நோயாளிகளுக்கு பீன்ஸ் கொடுப்பதை நிறுத்தினர். நிறுத்திய நான்கே வாரங்களில் அவர்களின் குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் கண்டறிந்தனர்.

 அதேபோல தீமைசெய்யும் பாக்டீரியாவும் அதிகரித்தன. இந்த பாக்டீரியாக்கள் எப்போதெல்லாம் நாம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலு குன்று இருக்கிறதோ, அப்போதெல்லாம் உடல்  உறுப்புகளைத்  தாக்கிப்  புற்றுநோய் உள்ளிட்ட பல  நோய்களை ஏற்படுத்துகின்றன.

 இதன் வாயிலாக புற்று நோய் வராமல் தடுப்பதற்கும்,வந்தவர்களுக்கு அதனுடைய தீவிரம் அதிகரிக்காமல் அதிகரிக்காமல் இருப்பதற்கும்  'நேவி பீன்ஸ்' உதவிகரமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பதிவு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment