"கடவுள் எதற்கு?"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே இயம்பினான் என் மூதாதையர்
அன்பே தெய்வம் அனைவரும் சமம்
அன்று கண்ட சமயம் எங்கே?"
"வெவ்வேறு பாதையில் இன்று போகிறான்
வெறுப்பை ஏற்படுத்தி மற்றவரைத் தாக்குகிறான்
ஒவ்வொரு சமயமும் கருத்தில் மோதுகின்றன
ஒற்றுமை சிதைக்கும் கடவுள் எதற்கு?"
👯👯
"கொடுத்து பெற்று மகிழ்ச்சி அடையுங்கள்!"
"ஒளி இல்லாத ஆதரவற்ற ஆத்மாக்களே
இதயம் துடிப்பற்று கல்லாக மாறியதேனோ?
பாழடைந்தஇருப்பு
மனதில் சிக்கிக் கொண்டதோ!
இலையுதிர் காலத்தில் தரிசுமரம் போல
கருணை இல்லாமல் பகிர்வு மறுத்தாயோ?"
"உண்மையான செல்வம்
உடைமையில் இல்லையே
தன்னலம் அற்ற
வெளிப்பாட்டின் செயலிலேயே!
பிறருக்குக் வழங்க கை கொடுக்க என்றும்
நிலமுழுவதும் தானாக மகிழ்ச்சி பரவுமே
கொடுத்து பெற்று மகிழ்ச்சி அடையுங்கள்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாண
0 comments:
Post a Comment