விஞ்ஞானம் வழங்கும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் 

🍶பழைய மருந்து, புதிய பயன்

உலகில் பெரும்பாலானோர் இறப்பிற்குக் காரணமான நோய்களுள் ஒன்று, உயர் ரத்த அழுத்த நோய். இதனால், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய்கள் ஏற்படும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகளும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. நீரிழிவு நோய்க்கு அடுத்தபடியாக சிறுநீரகச் செயலிழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் தான்.

உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் உள் உறுப்புச் சேதாரத்தைக் குறைக்க, விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் 'பாலிமைக்சின் - பி' (Polymyxin B), 'வான்கோமைசின்' (Vancomycin) என்ற இரண்டு ஆன்டிபயாடிக் மருந்துகள் இதற்குத் தீர்வாக அமையும் என்று அனுமானித்தனர்.

 இரு மருந்துகளையும் எலிகளுக்குக் கொடுத்துச் சோதனை செய்தனர். அவற்றில் 'பாலிமைக்சின் - பி' எவ்விதப் பலனையும் தரவில்லை. ஆனால், 'வான்கோமைசின்' மருந்து பலன் தந்தது.

 அதாவது இதயத்தின்தசைகள் இறுகி போதுமான ரத்தத்தைப் பாய்ச்ச இயலாத நிலைக்குத் தள்ளப்படும் நிலையான 'ஹைபர்ட்ராபிக்கார்டியோமையோபதி'(Hypertrophic cardi omyopathy) என்ற நோயை இது குணப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

'ஸ்ரெப்டோகாக்கை' உள்ளிட்ட பாக்டீரியாவைக் கொல்வதற்காகப்பயன்படும் இந்த ஆன்டிபயாடிக் இந்த நோய்க்கும் நிவாரணியாக இருப்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


💥கொழுப்பு படிதலைத் தடுக்கும்

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் அவற்றின் விட்டம் குறைந்து, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. இந்தக் கொழுப்பு படிதலைத் தடுக்கும் ஆற்றல், மாங்கனீஸ் சத்திற்கு உள்ளது என்று சமீபத்தில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


🎐'ஏசி' க்கு விடைகொடுங்கள்!

நம்முடைய வீடுகளில் வெப்பநிலையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிப்பதற்காக குளிரூட்டிகளைப் பயன்படுத்து கிறோம். ஆனால், இவை அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. தவிரவும் சுற்றுச் சூழலுக்குக் கேடான சில வாயுக்களை வெளியிடுகின்றன.

இவற்றுக்கு மாற்றாக, சில வகையான பூச்சுகளை வீட்டிற்கு வெளியே பூசுவதன் வாயி லாக வீட்டின் வெப்பநிலையைக் குறைக்க முடியும். பொதுவாகவே, அடர் நிறங்கள் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும். லேசான நிறங்கள் குறைவான வெப்பத்தையே உறிஞ்சும்.

இதனால் சமீப காலங்களில் அல்ட்ரா வெள்ளைப் பூச்சுகள் பூசப்படுகின்றன. இவை கிட்டத்தட்ட 95 சதவீத ஒளியையும், வெப்பத்தையும் பிரதிபலித்து விடுகின்றன.

பூசப்படுகின்றன. இவை கிட்டத்தட்ட 95 சதவீத ஒளியையும், வெப்பத்தையும் பிரதிபலித்து விடுகின்றன.

அந்த வகையில் ஹாங்காங்கைச் சேர்ந்த சிட்டி பல்கலை விஞ்ஞானிகள் செராமிக் பொருளைக் கொண்டு ஒரு வெள்ளைப் பூ ச்சை உருவாக்கி இருக்கின்றனர். இதை வீட்டுக் கூரை மீது பூசினால் போதும், தன்மீது படும் 99.6 சதவீத ஒளியைத் திருப்பி அனுப்பிவிடும்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் இதுதான் அதிகபட்சமான பிரதிபலிப்புத் திறனைக் கொண்டது. இது ஒரு வகை சைபொசிலஸ் வண்டை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அலுமினா பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால், இது 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கும். எளிதில் தீ பிடிக்கா து என்பது கூடுதல் சிறப்பு.

இது வெள்ளை நிறத்தில் மட்டும் இன்றி பிற நிறங்களிலும் கூட கிடைக்கும். விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இதன் வாயிலாக, குளிரூட்டிகளுக்குப் பயன்படும் மின்சாரத்தைக் குறைக்கலாம்.

 

🌉கனடா நாட்டில் பாலம்

பயன்படுத்தப்பட்ட கண்ணாடிப் பொருட்களைப் பொடியாக அரைத்து, கான்கிரீட்டில் கலந்து, கனடா நாட்டில் பாலம் ஒன்று [Columbia Icefield Skywalk: Cliff-edge Glass Walkway in Jasper National Park] கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சிமென்டின் பயன்பாடு குறைந்துள்ளதால் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது து என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


💀மறுசுழற்சி பிளாஸ்டிக் ஆபத்தா?...

பொதுவாக, பிளாஸ்டிக்குகளால் சுற்றுச்சூழலுக்கு வரும் கேட்டைக் தடுப்பதற்காகவும், புதிய பிளாஸ்டிக்கின் ற்பத்தியைக் குறைப்பதற்காகவும், பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்கிறோம். ஆனால், மறுசுழற்சி செய்யப்படு ம் பிளாஸ்டிக்குகள் மிக ஆபத்தானவை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

 சுவீடன் நாட்டில் உள்ள கோதென்பெர்க் பல்கலை ஆய்வாளர்கள் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நாடுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். வேதி யியல் முறையில் சோதனை மேற்கொண்டதில் அவற்றில் மனிதர்களுக்கு ஆபத்தான கொடிய நச்சுக்கள் இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது.

அவற்றில், 162 வேதிப் பொருட்கள் பூச்சிக்கொல்லிகளில் இருந்து வந்தவை. 89 ரசாயனங்கள், மருத்துக் கழிவுகளிலிருந்தும், 65 தொழிற்சாலைகளில் இருந்து வந்தவை. இது தவிர சாயம், நறுமணமூட்டி, துணி துவைக்கும் சோப்பு, துாள் ஆகியவற்றிலிருந்து வந்த நிறைய நச்சுக்களும் நெகிழிகளில் இருந்தன.

இதில் சில ரசாயனங்கள், நெகிழிகள் தயாரிக்கப்படும்போதில் இருந்தே இருக்கின்றன. சில மறுசுழற்சிக்கு உட்படு த்தும்போது சேர்ந்து கொள்கின்றன. உலகில் மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகளில் வெறும் 1 சதவீதம் மட்டுமே சர்வதேச விதிகளைப் பின்பற்றிச் செய்யப் படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகளில் காணப்படும் நச்சுக்கள் மறுசுழற்சி செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்க ளையும், பயன்படுத்தும் மக்களையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும்.

நெகிழி மறுசுழற்சி செய்யும் விதிமுறைகளைக் கடுமையாக முறைப்படுத்துவதோடு, உணவுப் பொட்டலம், பொம்மைகள் ஆகி யவற்றில் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்  கூறுகின்றனர்.

 

♋வெவ்வேறு புற்றுநோய்கள்

சுவீடன் நாட்டின் கோதென்பெர்க் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், அதிக உடல் எடை கொண்ட ஆண்களுக்கு, 17 வெவ்வேறு விதமான புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

🟡புதுவித ஜெல்

அமெரிக்காவின் கோச் புற்றுநோய் ஆய்வகம் புற்றுநோய் கட்டிகளுக்கு உள்ளேயே சென்று புற்றுநோய்க்கான மருந் தைச் செலுத்தும் ஒரு புதுவித ஜெல்லை உருவாக்கி உள்ளனர். எலிகள் மீது செய்த சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

 

🎆விரிசலைக் கட்டுப்படுத்தும் பாக்டீரியா!

இன்றைய தேதியில் கட்டுமானத்துறை பெரும்பாலும் கான்கிரீட்டை நம்பியே உள்ளது. வீடுகள் உட்பட பல்வேறு கட்டடங்கள் கான்கிரீட் கொண்டு தான் கட்டப்படுகின்றன. கான்கிரீட் நல்ல வலுவானது, உருவாக்குவதற்கு எளிதானது.

ஆனால், தட்ப வெப்பநிலையில் ஏற்படும் தொடர் மாற்றத்தால் நாளடைவில் கான்கிரீட்களில் வெடிப்புகள் உருவாகின் றன.

இவை அந்தக் கட்டடத்தின் பலத்தைக் குறைத்துவிடும். இவ்வாறு வெடிப்புகள் ஏற்படும்போது, தன்னைத் தானே  சரி செய்துகொள்ளும் கான்கிரீட்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ட்ரெக்செல்ஸ் பயோபைபரைப் (Drexel's BioFiber) பயன்படுத்தும் கான்கிரீட்கள்.

இந்த பைபர் நாரானது கான்கிரீட்டுக்குள் இருக்கும் கம்பி போல் அதன் வலிமையை அதிகரிக்கிறது. இந்த நார்கள் மீது உயிருள்ள பாக்டீரியா, படலங்களாகப் பூசப்படும். இவை பொதுவாகச் செயலிழந்த நிலையில் இருக்கும்.

ஒருவேளை அந்த கான்கிரீட்டில் வெடிப்புகள் ஏற்பட்டால், நார்களில் இருக்கும் பாக்டீரியா, சுற்றுப்புறச் சூழலில் உள்ள காற்று, ஈரப்பதம் பட்டு உயிர்ப்படையும். உயிர்த்தெழுந்த உடன் இது கான்கிரீட்டில் இருக்கும் கார்பன், சுண்ணாம்பு ஆகியவற்றை உண்ணத் துவங்கும்.

 இதன் பயனாக கால்சியம் கார்பனேட் உற்பத்தி செய்யப்படும். இது ஒரு விதமான ஒட்டுகின்ற பொருள் என்பதால் விரிசல் விழுந்த இடங்களில் புகுந்து, விரிசல்களை நிரப்பும். இவ்வாறு பாக்டீரியாவைப் படலமாகப் பூசுவதன் வாயிலாக, கான்கிரீட்டில் உருவாகும் விரிசல்களைக் கட்டுப்படுத்தி, கட்டடங்களின் வாழ்நாளை அதிகரிக்க முடியும்.

தொகுப்பு செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment