தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 08

பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING" [தமிழிலும், ஆங்கிலத்திலும்  / In English and Tamil]


எமது உடல் எப்படி எப்பொழுது மாற்றம் அடைந்தது என்பதை முழுமையாக கண்டறியவும், எமது முதாதையர் என்னத்தை பெரும்பாலும் உட்கொண்டார்கள் என்பதை அறியவும், தொல்லுயிர் எச்சங்களை / புதைபடிவங்களை [fossil] நாம் ஆய்வு செய்ய வேண்டும். எமது முன்னைய முதாதையர் வாலில்லாக் குரங்கினம் போன்ற ஆசுத்திராலோபித்தசினெசுச் [Australopithecus] ஆகும். இது ஹோமோ எரக்டஸிற்கும் கொரில்லாவிற்கும் இடைப்பட்டதாகும். இது பெரிய பெருங் குடலைக் கொண்ட பெரிய தொந்தியை கொண்டிருக்கிறது. இது பலமான தாவரப் பொருள்களை சமிக்க உதவுகிறது. மேலும் கடினமான தாவரப் பொருட்களை அரைக்கவும் நொறுக்கவும் ஏற்றவாறு இதன் பற்கள் பெரிய தட்டையாக உள்ளது. இந்த ஆசுத்திராலோ பித்தசினெசுச் தான் முதல் முதல் மரத்தில் இருந்து ஆப்ரிக்கா வனாந்தரத்திற்கு கீழ் இறங்கி வந்து, அங்கு, சமதளப் புல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த விலங்குகளை சாப்பிட ஆரம்பித்த இன்றைய மனிதனின் முதாதையர் ஆகும். இந்த மாற்றம் தான், அதன் உடல் உட்கூறு அமைப்பில் [anatomy] பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அடியெடுத்துக் கொடுத்தது. ஹொமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக் கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக் கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது பரிணாம மாற்றத்தை கண்டு மனிதன் போன்ற அமைப்பையும் கூர்மையான பற்களையும் 30% பெரிய மூளையையும் பெற்றது. மூளையின் முக்கியத்துவத்தை

 எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்

என்ற ஒரு பழமை வரி சுட்டிக்காட்டுகிறது. இந்த மாற்றம் அடைந்த ஹொமினிட்டுகளை [hominids] ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) என அழைத்தனர். என்றாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, எமது முதல் மனித முதாதையர் என நம்பப்படும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் எழுநிலை தொல்முன்மாந்தன் ஆகும். இது இன்னும் பெரிய மூளையையும், சிறிய தாடையையும் சிறிய பற்களையும் கொண்டிருந்தன. இதற்கு காரணம் கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது ஆகும். இந்த ஹோமோ எரக்டஸ் எம்மைப்போன்ற உடல் அமைப்பை கொண்டிருந்ததுடன் குட்டையான கையையும் நீண்ட கால்களையும் கொண்டிருந்தன. மேலும் பெரிய தாவரப் பொருட்களை பதப்படுத்தும் குடலை இழந்தன. இதனால் இப்ப இந்த ஹோமோ எரக்டஸ் நிமிர்ந்து நடக்கவும் மட்டும் அல்ல, அவை ஓடக் கூடியதாகவும் புத்திசாலியாகவும் இருந்தன.


பேராசிரியர் வரங்ஹத்தின் [Professor  Wrangham] கூற்றின் படி, ஆதி மனிதன் எப்படி சமைப்பது என்பதை கற்றுக்கொண்டது, எமது குடலை சிறிதாக்கியது. நாம் எமது உணவை சமைத்ததும், சமிபாடு நிகழ, பெரிய குடல் அவசியம் இல்லாமல் போய்விட்டது. எமது இந்த ஜீரண [செரிமான] அமைப்பின் மாற்றம் எமது மூளை பெரிதாக உதவியது. சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப் பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட 'சமை' என்ற வினைச் சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். சுருக்கமாக கூறுவதாயின் இது, உணவுப் பொருளின் சுவை, தோற்றம்,  ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும்.


கிரிஸ் ஓர்கன், சார்லஸ் நுன், சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் வரங்ஹம் [Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham] ஆகிய ஆய்வாளர்கள், சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர். சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்பின் முக்கிய அம்சம் என வரங்ஹம் குறிப்பிடுகிறார், இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால், அது மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு குறையும் சதவீதத்திற்கு இணையாக, மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார். எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் [anthropologists] இதற்கு எதிராக கூறுகின்றனர், அவர்கள் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும், எம் உடலுக்குள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப் படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன. உணவுப் பண்டத்தை முதன் முதலாக வாயில் கடிக்கும் போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது. வாயில் உணவு துண்டுகளாக்கப் பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ் நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறு சிறு உருண்டைகளாகிறது. இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப் படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றி லிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன. இங்கு தான் உணவு பெருமளவு செரிமான மடைகிறது. குடலில் இருக்கும் பல நுண்ணுயிர்கள் (சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு [cells / உயிரணு] ஆற்றலை விநியோகிக்கிறது. ஆகவே சமைத்த உணவை சாப்பிடும் போது, ஊட்டக் கூறுகளை அல்லது போசாக்கை விடுவிக்க எமது வயிறு பெரிதாக வேலை செய்யத் தேவையில்லை. ஆகவே மூளைக்கு சக்தி கொடுக்க அங்கு நிறைய சக்தி இருந்தது. மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது. மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப் படுகிறது. மேலும் சமத்த உணவு கூடிய ஆற்றலை விடுவிப்பதுடன், அதை ஜீரணிக்க குறைந்த ஆற்றலையே உடம்பு பாவிக்கிறது, அது மட்டும் அல்ல, சமையல் செய்து சாப்பிடும் ஒரு பிராணி, பூமியின் அதி உன்னத புத்திசாலி உயிர் இனமான மனிதன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி :-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 09 தொடரும்

 

 

FOOD HABITS OF TAMILS / PART 08 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"

 


To understand how and when our bodies changed, we need to take a closer look at what our ancestors ate by studying the fossil records. Our earliest ancestor was the ape - like Australopithecus. Australopithecus had a large belly containing a big large - intestine, essential to digest the robust plant matter, and had large, flat teeth which it used for grinding and crushing tough vegetation. None the less, it was Australopithecus that moved out of the trees and onto the African savannah, and started to eat the animals that grazed there. And it was this change of habitat, lifestyle and diet that also prompted major changes in anatomy. The eating of meat ties in with an evolutionary shift 2.3 million years ago resulting in a more human -looking ancestor with sharper teeth and a 30% bigger brain, called Homo habilis. The most momentous shift however, happened 1.8 million years ago when Homo erectus - our first  "truly human" ancestor arrived on the scene. Homo erectus had an even bigger brain, smaller jaws and teeth. Erectus also had a similar body shape to us.Shorter arms and longer legs appeared, and gone was the large vegetable - processing gut, meaning that Erectus could not only walk upright, but could also run. He was cleverer and faster.


According to Professor Wrangham - When Our earliest ancestor started to cook, this Cooking made our guts smaller. He says. "Once we cooked our food, we didn't need big guts. "They're costly in terms of energy. Individuals that were born with small guts were able to save energy, have more babies and survive better. Preparing food with heat or fire is an activity unique to humans, and scientists believe the advent of cooking played an important role in human evolution. Phylogenetic analysis by Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham suggests that human ancestors may have invented cooking as far back as 1.8 million to 2.3 million years ago. Wrangham proposes that cooking was instrumental in human evolution, as it reduced the time required for foraging and led to an increase in brain size. He estimates the percentage decrease in gut size of early humans directly correlates to the increase in brain size. Most other anthropologists, however,- as No known clear archaeological evidence for the first cooking of food has survived - believe that cooking fires began only about 300,000 years ago, when hearths started appearing. Cooking food breaks down its cells, meaning that our stomachs need to do less work to liberate the nutrients our bodies need. This, freed up energy which could then be used to power a larger brain. The increase in brain-size mirrors the reduction in the size of the gut. Significantly found that the reduction in the size of our digestive system was exactly the same amount that our brains grew by. It is also found that not only does cooked food release more energy, but the body uses less energy in digesting it. Humans - the cleverest species on earth - are also the only species that cooks.

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 09 WILL FOLLOW...


👉அடுத்த பகுதியினை வாசிக்க ... அழுத்துக

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 09:

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

ↈↈↈↈↈↈↈↈↈ

0 comments:

Post a Comment