சர்தார்ஜி ஜோக்ஸ்
🂿சாவியை முழுங்கிவிட்டான்
சர்தார்ஜி: டாக்டர், என் பையன் சாவியை முழுங்கிட்டான்.
டாக்டர்: எப்போது?
சர்தார்ஜி: 3 மாசம் முன்னாடி...
டாக்டர்: இவ்வளவு நாளும் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்?
சர்தார்ஜி: மாற்றுச் சாவியை உபயோகித்துக் கொண்டிருந்தோம்.
டாக்டர்: சரி, இப்போ எதற்கு வந்தீர்கள்?
சர்தார்ஜி:மாற்றுச் சாவி தொலைந்துவிட்டது....
🂿ஹனிமூன்
ஒரு சர்தார்ஜி ஹனிமூனுக்காக அமெரிக்க போயிருந்தாராம்.அங்க சுத்திப் பார்க்க ஒரு நண்பனிடம் இரவலாக கார் கேட்டிருந்தாராம்.
புது மனைவியை ஹொட்டேல் லில் விட்டுட்டு நண்பனிடம் கார் எடுத்துக்கொண்டு வரும்போது காரிலிருந்து மனைவிக்குப் போன் பண்ணினாராம்.
"டார்லிங் , கார் வாங்கி ஓடியிற்று வாறேன் .இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவேன்.ரெடியா இரு" என்றாராம்.
சில நிமிடத்தில் இருந்து அவரின் மனைவியிடம் இருந்து போன் வந்தது.
"டியர், பார்த்து காரை கவனமாய் ஒட்டி வாருங்கோ. இப்ப நான் டிவி யில பார்த்தேன். நீங்க வாற ரோட்டில எவனோ ஒருத்தன் ராங் சயிட் டில கார் ஒட்டியிற்று போறான்."
அதற்கு சர்தார்ஜியின் பதில்,
"ஒருத்தன் இல்ல டார்லிங். எல்லாப் பயலுகளும்தான் ராங் சயிட் டில கார் ஒட்டியிற்று வர்றங்கள்."
🂿கடியுங்க பார்க்கலாம்
இரவெல்லாம் கொசுக் கடியில அவதியுற்ற சர்தார்ஜி விஷத்தை எடுத்து மட மட வென்று குடித்தார்.அதன்பின் கொசுக்களைப் பார்த்து,
"இப்ப கடியுங்க பார்க்கலாம்.....
கடிச்சா செத்துடுவீங்க ......."
🂿என்ன நடந்தது?
ஆசிரியர்: 1869 ல் என்ன நடந்தது?
சர்தார்: எனக்குத் தெரியாது சேர்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம் தான் காந்திஜி பிறந்தார். சரி அடுத்த கேள்வி 1873 ல் என்ன நடந்தது?
சர்தார்: காந்திஜிக்கு 4 வயது சேர்.
🂿சுடுதண்ணீர் ப்போத்தல்
கடைக்குள் வந்த ஒரு சர்தார்ஜி தெர்மாஸ் பிளாஸ்க்கை பார்த்து "இது எதற்கு?"என்று கேட்டார்.
கடைக்காரர் சொன்னார்," இது சுடான பொருளைச் சூடாகவும் ,குளிர்ந்த பொருளை குளிராகவும் வைச்சிருக்கும்"
ஒன்று வாங்கிய சர்தார்ஜி மறுநாள் அப்போத்தலுடன் அலுவலகம் போனார்.
அவரது நண்பர் அதனைக் கண்டு "இதுக்குள் என்ன இருக்கு" என்று கேட்க, சர்தார்ஜி பெருமையுடன் சொன்னார் "இரண்டு கிளாஸ் காப்பியும், கோக் கும்"
🂿பீர் போத்தலும் சிக்கன் பிரியாணியும்
தற்கொலை செய்ய வந்த சர்தார்ஜி கையில் ஒரு போத்தல் பியரும் சிக்கென் பிரியாணியும் எடுத்துக் கொண்டு போனார்.
ஏன் என்று கேட்க, "ரெயின் லேட்டா வந்தா பசிக்குமே" என்றார்.
🂿கிரிக்கெட்
டீச்சர் தனது மாணவர்கள் அனைவரையும் கிரிக்கெட் நடந்து கொண்டிருக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார். ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிரஅனைத்து மாணவர்களும் கட்டுரை எழுதத் துவங்கினர்.
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசரம் அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.
டீச்சர் பேப்பரைப் பிரித்துப் பார்த்தபோது,
"மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டுள்ளது."
என எழுதியிருந்தான்.
©தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment