சமத்துவ மழை & மனிதன் (கவிகள்)




"சமுத்திரம் எழுதும் சமத்துவ மழை"

 

"சமுத்திரம் எழுதும் சமத்துவ மழை

தரித்திரம் போக்கி செல்வம் வழங்கி

காத்திரம் ஆன ஆரோக்கியம் உண்டாக்கி

சித்திரம் சொல்லா அழகை பொழிந்து

விசித்திரம் உலகை ஒன்றாய்ப் பார்த்து

சரித்திரம் படைக்குது வேறுபாடு ஒழித்து!"

 

"முன்னிக் கடலை சுருக்கி மேலெடுத்து

மின்னிப் பொலிந்து இடி முழங்கி

அன்னம் வழங்க வயல் நனைக்க

மண்ணை நோக்கி நீர் கொட்டி

ஊண் உறக்கம் உயிர்களுக்கு கொடுக்க

கண்ணாய் காக்கும் இயற்கை வாழ்க!"

 

🥀🌦🌦🌦🥀

 

"மனிதன் திருந்தானோ?"


 

"இயற்கையின் பேரரசில் அற்புதமான காட்சி

மானருகில் சிங்கம் சுற்றித் திரியும்

ஆற்றின் விளிம்பில் அணிவகுப்பு நடக்கும்

இணக்கமான ஒற்றுமை தானாக நிகழுதே?"

 

"பிரித்தாளும் மனிதனோ ஏதேதோ உளறுகிறான்

வேலிகள் போட்டு வேறுபாடு காட்டுகிறான்

வேதங்கள் ஓதி மக்களைப் பிரிக்கிறான்

மாக்களைப் பார்த்து மனிதன் திருந்தானோ?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


No comments:

Post a Comment